பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

353

மகிழ்ச்சி அடைந்தார்கள். இஸ்லாமிய போதனைகளை ஏற்காதவர்களான இருளை அகற்றத் தோன்றிய சூரியனாக இருந்த அதே சமயம் அந்த சூரியன் தோன்ற மலர்ந்த தாமரையை ஒத்த முகத்தை உடையவர்களாக அண்ணல் நபி (சல்) அவர்கள் மகிழ்ச்சி அடைந்து விளங்கினார்கள். இச்கருத்துக்களே இங்கு வருணிக்கப்பட்டுள்ளன.

“அமரர்கோ னினைய மாற்ற மாதிதன் பருமான் மேற்கொன்
டிமைநொடிப் பெழுதிற் றோன்றியியம்பியதினங்கர ரான
திமிரவெம் பகைக்குத் தோன்றுந் தினகர னாகப் பூத்த
கமலவொண் வதனச் செவ்வி முகம்மது களிப்புக் கொண்டார்”[1]

இம்மூன்று செய்யுட்களிலும் அல்லாஹ்வின் கட்டளை என்பதனை உறுதிப்படுத்தும் முகமாக 'ஆதிதன் பருமான்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளமை ஈண்டு நோக்கற்பாலது.

அறபு மொழியில் உள்ள நபி. றசூல் என்னும் பதங்களுக்குப் பதிலாகப் பாரசீக மொழியிலே ‘பயகாம்பா’ சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இச்சொல்லும் முஸ்லிம்களின் தமிழ்ப் பேச்சு வழக்கிலும் இலக்கிய வழக்கிலும் ஒரு தனி இடத்தை வகிக்கிறது. சீறாப்புராணத்திலும் பயகாம்பர் என்னும் இந்த பாரசீகச் சொல் ஆளப்பட்டுள்ளது. இந்த பயகாம்பர் என்னும் சொல்லின் ஆட்சி முக்கியமாக ஹிஜுறத்துக் காண்டத்திலேதான் பயன்படுத்தப பட்டுள்ளதும் ஈண்டு குறிப்பிடத்தக்கது எப்பொழுதும் இனிமையான தன்மையையும் ஓதுபவர்களிடையே ஏற்படுத்தும் திருக்குர்ஆன் என்னும் திருமறையாகும். இநத திருமறையின் பயகாம்பர் என அண்ணல் நபி (சல்) அவர்கள் இவ்வாறு வருணிக்கப்பட்டுள்ளார்கள்.

  1. சீறா. ஹபீபு மக்கத்துக்கு வந்த படலம் 76

23