பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

354


"பண்டரு மறைப்பய காம்பர் மாமுகங்
கண்டனர் பதத்தினிற்கரங்க டேய்த் தினர்" [1]

உகுதுப் போரின்போது குதாதா (றலி) அவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள் பயகாம்பர் முகம்மது (சல்) அவர்கள் என்பது இவ்வாறு அமைந்துள்ளது.

"வெற்றி யுணர்ந்தீர் சற்று மறந்தீர் மிகைபாவக்
குற்ற முணர்ந்தீர் தீனிலை முற்றுங் குடிகொண்டீர்
துற்றிய காயம் பீஸ்பீல் நீருந் துயரெய்தப்
பற்றுதல் வேண்டா மென்றனர் வேதப் பய காம்பர்." [2]

சுகுறா என்னும் இடத்தை முற்றுகைவிட்டு அங்குள்ளவர்களை தோற்கடித்து வெற்றிவாகை சூடினார்கள். அண்ணல் நபி (சல்) அவர்கள் அந்தக் கோட்டையிலிருந்த பொருள்கள் அத்துணையையும் சிறிதும் மிச்சமின்றி தோழர்களுக்குப் பகிர்ந்து கொடுத்து விட்டார்கள். எல்லோர்பாலும் அன்பு மிக்குடையவராகிய பயகாம்பர் என்று அண்ணல் நபி (சல்) அவர்கள் இவ்வாறு விதந்தோதப்பட்டுள்ளார்கள்

"இஞ்சியினி ருந்தபொரு ளெட்டுணையு மின்றி
நெஞ்சின் மகிழ் வுற்றுமிடி பார்க்குதவி நேச
மிஞ்சுபய காம்பர் மற வேந்தர்படை சூழ
வஞ்சமற வேமதின மாநகரின் வந்தார்'." [3]

பயகாம்பர் என்று வழங்கப்பட்ட நபிகள் பெருமானார் (சல்) அவர்கள் நித்திரையிலிருந்து விழித்தார்கள் என்பது நயம்பட வருணிக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய கண்களிலே துயில் படர்ந்திருந்தது. விழிகளோ தாமரை மலரை ஒத்திருந்தன. அம்மட்டன்று. அந்தக் கண்கள் எல்லையற்ற

  1. 1. சீறா. மதீனம் புக்க படலம் 28
  2. 2. சீறா. உகுதுப் படலம் 167
  3. 3. சீறா. சுகுறாப் படலம் 16