பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

356


குப் பின்னர் இஸ்லாத்தையும், இஸ்லாமிய பேரரசையும் வழி நடத்திய குலபா உறாஷதீன் என்னும் முதல் நான்கு கலீபாக்களையும் குறிப்பதாக இந்த யார் என்னும் பாரசீகச் சொல் பயன்படுத்தப்படுகிறது. இவர்களின் பதவிக்காக நபிகள் நாயகம் (சல்) அவர்களின் தீர்க்க தரிசனத்துக்கு இணங்க நாற்பது ஆண்டுகளே நீடித்திருந்தது. பொதுவாக இந்த யார் என்னும் பாரசீகச் சொல் சீறாப்புராணத்திலே பயன்படுத்தப்படும் பொழுது நான்கு கலீபாக்களான யார்களைக் குறிப்பிடுவதற்கு முன்னர் அண்ணல் நபி (சல்) அவர்கள் குறிப்பிடுவதுண்டு. நபிகள் நாயகம் நான்கு கலீபாக்களும் என்னும் பொருளில்,

"இறைவன் றூதரு மியார்க ணால் வரும்" [1]

என்றும்,

"வள்ளனந் நபியு நாலி யார்களு மற்ற ளோரும்" [2]

என்றும்,

மநைபி முகம்மது மற்ற யார்களும் (சவீக்குப் படலம் 48) என்றும் உமறுப்புலவர் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம். நன்மாராயத்தைப் பெற்றவர்கள் நான்கு கலீபாக்களும் என்ற கருத்தில், 'வரத்தினியார்கள்' (முறைசீக்குப் படலம் 7) என்றும் சத்தியமானவற்றையே பேசுவதைத் தம் குறிக்கோளாகக் கொண்டவர்கள், அழகு மிக்கவர்கள் இந்த கலீபாக்கள் என்றும் கருத்துத் தொனிக்க,

"..................எழின் மிக்க
வாய்மை விளங்குமி யார்களும்." [3]

என்றும் சீறாப்புராணத்தில் வருணிக்கப்பட்டுள்ளது. அண்ணல் நபி (சல்) அவர்களைச் சூழ்வர நான்கு கலிபாக்


  1. 1. சீறா. சீபுல்பகுறுப் படலம் 1
  2. 2. சீறா பதுறுப் படலம் 2
  3. 3. சீறா பனிகுறைலா வதைப் படலம் 38