பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/370

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

364


தாகும். மாதம் என்ற பொருளிலே இச் சொல் இடம் பெற்றுள்ளது. வருடமே ழினிற்றின முஹர்ர மாத்தையில் (ஒட்டெழு தித் தீர்ந்த படலம் 1).
றபீஉல் அவ்வல் - இஸ்லாமிய ஆண்டிலே மூன்றாவது மாதம். இளவேனிற் பருவத்தின் மாதம் என்பது இந்த அறபுச் சொற்றொடரின் பொருளாகும், 'அம்மதி' மாசத்தொகையினில் றபீவுல்லவலிற், பன்னிரண்டாந் தேதி (நபியவதாரப் படலம் 89), வையக மதிக்கு முகம்மதின் வயது நாற்பதில் றபீயுலவ் வலினிற் (நபிப்பட்டம் பெற்ற படலம் 1) வரிசை நேர் றபீவு லவ்வல் மாதமீ ரைந்து நாளில் (நபிப் பட்டம் பெற்ற படலம் 16) வருமுறை பதினான் காண்டின் மாதத்தொகையினில் றபீவுலவ் வலினில் (யாத்திரைப் படலம் 65), றபீயு லவ்வலின் (மதீனம் புக்கப் படலம் 26).
றஜப் - இது இஸ்லாமிய ஆண்டின் ஏழாவது மாதம். கண்ணியம் மிக்க மாதம் என்பது இதன் பொருள். இஸ்லாத்துக்குமுன்னர் கண்ணியம் மிக்கதாகக் கருதப்பட்டது என்று கூறுவர். 'திங்களா மிறஜபு முதற்றே வெள்ளியிரா' (நபியவதாரப் படலம் 16) வருட மைந்தென வரவரு மிறஜபு மாதம் (ஈமான் கொண்டவர்கள் ஹபஷா ராச்சியத்துக்குப் போந்த படலம் 7), 'இவ் மிறஜபு மாதத்தையில்' (உகுபான் படலம் 9).
ஷபான் - இஸ்லாமிய ஆண்டின் எட்டாம் மாதம். விட்டுப்பிரியும் மாதம் என்பது இச்சொல்லின் பொருள், அறபிகள் நீர் தேடிப் பிரியும்