பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

367


உமறுவின் முற்றுப்பெறா சீறாப் புராணக் காப்பியத்தின் இணைப்பு நிறைவுக் காப்பியம் பனீ அகமது மரைக்காயரின் சின்னச்சீறா. சீறாப்புராணம் அறம், பொருள், இன்பம், வீடு, எனும் நாற்பயனும் பகரும் முழுமைக் காப்பியமாக நிறைவு பெறுவது சின்னச்சீறாவும் இணைந்தே என்பது கருதத்தக்கது. எனவே, இஃது இணைக்காப்பியம்; பிணைத்து நிற்கின்ற பிணைப்புக் காப்பியம்,

சிந்தையள்ளும் சீறாவினை உமறுப்புலவர், "காண்டமோர் மூன்றெனக் கணித்தனர் மூன்றாம் காண்டச் சரிதம் கடைவறா முற்றாக் குறையை அறிந்து, அக்குறை தவிர்த்திடவே ......பண்புறு குலத்தில் .........தேங்கமழ்ச் சோலைத் திருநகர்க் காயலம்பதியில்......வண்பனீ அகமது மரைக் காயர் என்னும் ஒண்பெயர் உடைய உயர்மொழிப் புலவர்"[1] (ஹிஜ்ரி 1145இல் (கி பி. 1782] சின்னச்சீறாவினை அரங்கேற்றினார், [2]

சீறாப்புராணத்தினை முடித்தற் பொருட்டு முதன் முதலில் புலவர் பனீ அகமதுவின் கருத்திற்பட்டு, விரைந்து எழுந்தது சின்னச்சீறா எனலாம். மேலும், (அ) புதுகுஷ் ஷாமின் முதற்காண்டம் [புலவர் நாயகம்] (ஆ) சீறா இரண்டாம் வால்யூம் [மொன்னா முஹம்மது காதி] ஏன் எழுந்தன என்பதும் ஒருவகை ஆய்வுப் பொருளே. எனவே சின்னச் சீறாவுடன் மேற்சொன்ன இரண்டும் ஒப்பாய்வுக்குரியதாகும்.

உமறுப்புலவர் சீறாச்செல்வத்தினை 5027 பாக்களில் 12 படலங்களாகப் பாடியுள்ளார். புலவர் பனீ, ஹிஜ்ரத்துக் காண்டத்தின் தொடராக 39 படலங்களை 1929 பாக்களில் பாடி முடித்துள்ளார். இருவரும் விருத்தப் பாக்களாகவே பாடி உள்ளனர் உமறுப்புலவர் விட்ட குறையினை பனீ

  1. 1. சின்னச்சீறா முதற்பதிப்பின் பாயிரம், 69 முதல் 89 வரிகள்
  2. 2. சின்னச்சீறா பாடல் எண் ஏழு