பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

370


போன்றே ஆங்காங்கே 22 பாடல்களில் காணலாம். இதனை போலவே, பனீ அகமதுவும் தம் கொடை நாயகரான வள்ளல் லப்பை நயினாரை 451, 891, 1346, 1036, 1719 போன்ற இடங்களில் போற்றுவதைக் காணலாம்.

சீறாவின் கடவுள் வாழ்த்து, முதன்மையான பாடலான "திருவினும் திருவாய்" போன்றே புகழ்மிகு கருத்துச் செறிவுடைய பனீயின் காப்புப் பாடல் 'உண்மையாய்' எனத் தொடங்கும் பாடல் குறிப்பிடத்தக்கது.

உமறுப்புலவர் கடவுள் வாழ்த்தில், "செந்தமிழ்ப் புலவர்கள் முன் தாம் கவிபாடுவது புயல்காற்றுக்கெதிராக, ஓர் சிற்றெறும்பு மூச்சு விடுவது போலவும், இடியோசைக் கெதிரே, கையால் நொடியோசை செய்வது போலவும் (19, 20) உள்ளது என்று அவையடக்கம் பாடுகிறார். பனீ, தன் அவையடக்கத்தினை வச்சிரமலை முன் மண்திடர் போன்றும் பாம்பின் இரத்தின மணி முன் குன்றிமணி [8] போன்றும் என்று பாடுவதுடன் "தன்னை 'பேதை' அறிவினன்" என்றும் அடக்கமாகக் குறிப்பிடுகின்றார்.

உமறு, பதுறுப் படலத்தில் பல்வேறு வகை முழக்கக் கருவிகளை ஒரே பாடலில்,

'முரசு துந்துமி திண்டிமம் முருடு மல்லரி பெரிய காகள தவுரி பூரிகை தவில்பேரி'

என்று பாடுகிறார். பனீயும் பல்வேறு கருவிகளை-சிலவற்றை புதிதாகச் சேர்த்தும் ஒரே பாடலில்,

"பேரி முரசு தடாரிபம்மை
   பீலி முழவு முருடு தக்கை
தூரி அந்த ணம்தகுணி
   துந்துமி தீண்டி மம் பதலை
தாரை நவுரி காகளம்வெண்
   சங்கமம் இரலை சிகண்டி சின்னம்