பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

374


அசனார் பிறந்த படலம் பாடல் 3, 4-லும் 'எழில் செயினபைப் பொறைச் செழுமமுதை இல்லக்கிழத்தியாக்கிய செய்தி அதே படலம் பாடல் 8-லும். "பேறினால் வரும் பேதையர் உம்முசல்மாவைப்" பெருந்துணையாக்கிய செய்தி உசைனார் பிறந்த படலத்திலும், "திருவும் குணநலனும் பெறு செயலும் உருவந்த பொறை நிறையு சுவைறா (சுவைரியா)" என்ற மானைச் சில பாடங்களில் வருணித்து இறுதியில் மனைவியாக்கினாரே' என்று முறைசீக்குப் படலத்திலும் பாடிக்கொண்டே வந்தும் "செம்மையும் அறிவுமிக்க ஆயிஷா என்னும் செல்வி" மணந்த செய்தியை தனியே குறிப்பிடாது, காட்டிச் செல்கின்றார்.

சின்னச்சீறாவில் பெருமானாரின் திருமணச் செய்திகளை (i) மன்னர் முகெளகிஸ் அனுப்பிய மாரியகாப்தி'யை மணந்த செய்தியை படலம் ஐந்திலும், (ii) போர்க்கைதி 'ஸ்பிய்யா' என்னும் யூதப் பெண்ணை மகர் ஆய்முடித்த செய்தியினை கைபர் படலத்கிலும் (365-371) பாடுகின்றார். இதே நிகழ்ச்சியில் பிறிதொரு நுட்பமான செய்தியும் பாடல் 371 முதல் 375 வரை தருகிறார். 'நங்கை ஸபிய்யாவின் கமலக்கண்ணின் ஒருபால் பசந்த தழுப்பு இருக்கக் கண்டு, இஃது என்னவென நாயகம் கேட்க 'கினானாபின் ஹகீக் என்பவருக்குத் தன் தாய்தந்தையார் இன்பத் துணைவியாக்கிய அன்று இரவு தான். 'வானில் எழுந்த வெண்மதி என்மடி மீது இருந்து விளையாடக் கண்டதை,

"நிரைத்த நிலாவெண் மணித்தசும்பில்
 நீர்கான் றொழுகும் உவாமதியம்
தரித்த சுருங்கை தனில் உரிஞ்சி
  தவழும் மாட மதீனாவில்
கரைத்த மதமா முனைர் முடி
  கவிழ்த்த பதத்தார் நபிமகுமூது
இரைத்த வரிவண்டு உறங்கும் மலர்
  மாலை இடுவர் அவளுக்கு......

(374)