பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/386

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

380


சதக்கத்துல்லா அப்பா அவர்கள் மறைவுற்றது ஹிஜ்ரி 115 (கி.பி 1700) என்று அறிகிறோம்.[1] அடுத்து வள்ளல் சீதக்காதியின் காலம் கி.பி. 1720) என்று சான்றுகளுடன் டாக்டர் நயினார் அவர்கள் நிறுவியுள்ளார்.[2] இந்திய வரலாற்றிலேயே அதற்கு முன் காணாத கடும்புயலின் விளைவாக இராமநாதபுர மக்கள் 1710இல் கடும் பஞ்சத்தால் வாடினர். அச்சமயம் வள்ளல் சீதக்காதி தம் பொருளனைத்தையும் மக்களுக்கு வாரி வாரி வழங்கியுள்ளார். எனவே, அவர் அதற்குப் பின்னரே மறைந்திருக்க வேண்டும்.

உமறுப்புலவர் சதுக்கத்துல்லா மறைவின் போதோ அல்லது சீதக்காதியாரின் மறைவின் போதோ சீறாப்புராணத்தைப் பாடி முடிக்கவில்லை என்று அறிகிறோம். உமறுப் புலவர் சீதக்காதியின் பெயரைச் சீறாவில் யாண்டும் குறிப்பிடவில்லையாயினும் சதக்கத்துல்லா அவர்களின் பெயரைக் கடவுள் வாழ்த்துப் பகுதியிலேயே,

"இம்மையும் மறுமையும் பேறிலங்கிய சதக்கத்துல்லா
செம்மலரடி யிரண்டுஞ் சிந்தையி விருத்தினனே"

(சீறா. கடவுள் வாழ்த்துப் பா. 17)

என்று குறிப்பிடுகிறார், சதக்கத்துல்லா மறைவுற்ற காரணத்தினால் தான் அவர் திருவடிகளைச் "சிந்தையிலிருத்தினனே" என்று உமறு பாடியுள்ளார். எனவே இவ்விருவரின் மறைவுக்குப் பின்னரே சீறாப் பாடப் பெற்றிருக்கும்.

உமறுப்புலவரவர்களின் காலம் குறித்து வரும் கீழ்க் காணும் பாடலை மேற்கூறிய பக்கச் சான்றுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அவர்தம் காலம் தெளிவாகும்.

  1. 1. சீறா சதக்கத்துல்லா சரித்திரச் சுருக்கம்,
  2. 2. எஸ்.எம். எச். நயினார். சீதக்காதி வள்ளல், பக், 9.