பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33


அலைக்கும்" என்பதாகும். உங்கள் மீது சாந்தி உண்டாகுக' என்பது அவ்வாழ்த்துரையின் பொருள்.

அதற்கு மறுமொழி அல்லது பதில் கூறுவது முதலில் சலாம் கூறியவரின் வாழ்த்துரையைக் காட்டிலும் கூடுதலாகவே இருக்கவேண்டும் என்ற கருத்தில் "வ அலைக்கு முஸ் லாம் வ ரஹ்மத்தல்லாஹி வபரகாத்து ஹு" (உங்கள் மீதும் சாந்தியும் இறைவனின் கருணையும் நல்லாசியும் உண்டாகுக! என்று உரைப்பது இஸ்லாமிய மரபு. இப்படி ஸ்லாமுக்கு பதில் உரைப்பதற்கு "பிறத்தி" என்னும் புதியதொரு தமிழ்ச் சொல்லை உமறுப் புலவரும் "சின்ன சீறா" பாடிய பனீ அஹ்மது மரைக்காயர் புலவர் அவர்களும் தமது காப்பியத்திலே பயன்படுத்தியுள்ளார்.

இப்படியாக, சலாம் உரைக்கும் இஸ்லாமிய மரபை உமறுப் புலவர் மிகப் பல இடங்களில் பொருத்தமாக இணைத்துப் பாடியுள்ளார். அந்த சலாம்களிலெல்லாம் மிகுந்த சிறப்புடையது இறைவன் அமரர் கோன் ஜிபுறயீல் (அலை) அவர்களின் வாயிலாக நபிபெருமானார் (ஸல்) அவர் களுக்குச் சொல்லியனுப்பும் சலாம் ஆகும்.

ஆயிரம் சிறையும் ஒவ்வா ஆயிரம் சிரசு மாயீ
ராயிரம் விழியும் தோன்ற ஆயிரம் முகமும் ஆகி
ஆயிரம் நாவினாலும் அகுமதே என்னக் கூவி
ஆயிரம் பெயர் னான்தான் சலாம் என அருளிச் செய்தார். [1]

இறைவனின் சலாமைக் கூறுவது மட்டுமின்றி அமரருக்கரசர் ஜிபுறயீல் (அலை) அவர்கள் இறைதூதரிடம் வரும் போதெல்லாம் தம்முடைய சலாமையும் உரைக்கத் தவறுவதே இல்லை.

"...........,வரிசை பிக்கமரர்
கோமான் சலாமுன் கூறியபின்"

என்று தொழுகை வந்த வரலாற்றுப் படலத்திலே (36)



3

  1. 1. சீறா. ஹபீபு மக்கத்துக்கு வந்த படலம் 86