பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/396

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

390

சென்னை பூமகள் விலாச அச்சுக்கூடம், மதுரைப் புதுமண்டபப் புத்தகக்கடைப் பதிப்பு போன்ற பல பதிப்புகள் வந்துள்ளன.

நாச்சிகுளத்தார் பதிப்பு

சீறா மூலப்பதிப்புகளில் இன்றியமையாது குறிப்பிட வேண்டியது 1974 இல் கவிஞர் நாச்சிகுளத்தார் பதிப்பித்துச் சென்னை திரீயெம் பிரிண்டர்ஸ் வெளியிட்டுள்ள சீறாப்புராணப் பதிப்பாகும். அதனைச் செம்மையான் முறையில் பதிப்பிக்கத் துணை நின்றவர்கள் ,முஸ்லிம் முரசு சிறப்பாசிரியரான திரு. ஸையிது முகம்மது (ஹஸன்) அவர்களும் பிறை சிறப்பாசிரியரான மெளல வீ எம். அப்துல் வஹ்ஹாப் அவர்களுமாவர். இவர்கள் தங்களுக்குக் கிடைத்த பத்துக்கு மேற்பட்ட அச்சுப் பிரதிகளை வைத்துக் கொண்டு பேரளவு பிழைகளைக்களைந்து, சீர்பிரித்துச்செம்மையாக அச்சிட்டுள்ளனர். உமறுப்புலவர் வரலாற்றுச் சுருக்கமும் சில அரபுச் சொற்களின் தமிழாக்கமும் முன்னிணைப்பாகக் கொடுக்கப் பெற்றுள்ளன. அருஞ் சொல்லுவரை பின்னிணைப்பாக உள்ளது.

தேவையான பதிப்பு

இத்தனை பதிப்புகள் வந்திருப்பினும் ஒரு பதிப்பிலாவது பாட்டு முதற்குறிப்பாவது, ஆராய்ச்சி முன்னுரையாவது இடம் பெறாதது பெரும் வருத்தத்திற்குரியசெய்தியேயாகும். அருஞ் சொற்குறிப்புரையும் பெருமளவில் இருக்கவேண்டும். ஒவ்வொரு படலத்திற்கும் கதைச் சுருக்கம் சேர்க்கப்பெறுதல் வேண்டும்.

மூலநூல் பலமுறை பதிப்பிக்கப்பெற்றுள்ளன நிலையில் இப்பெரும் காவியம் ஒரே ஒரு உறையுடன் மட்டுமே இது காறும் வெளி வந்திருப்பது பெருத்த ஏமாற்றத்திற்குரிய செய்தியேயாகும்,