பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/402

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

396

உரைநடை நூல்கள்

சீறா முழுவதையும் படிக்க இயலாதவர்கட்கு அதன் கதைப் போக்கை மட்டும் அறிந்து கொள்ளப் பயன்படுபவை ‘உரைநடை’ என்னும் வசன நூல்கள்.

சீறா வசனம்

சீறா வசனங்களில் குறிப்பிடத்தக்கது. நாகூர் குலாம் காதிறு நாவலர் இயற்றிய ‘சீறா வசன’மாகும். இது 1885க்கு முன்பிருக்கலாம். அடுத்துக் குறிப்பிட வேண்டியது, பட்டணம் கண்ணகுமதுப் புலவரவர்களியற்றிய ‘சீறா வசன காவியம்’. 1887இல் அச்சிடப்பெற்றது.

இறுதியாக வெளிவந்த சீறா வசனம் ‘நபிகள் நாயகத்தின் ஜீவிய சரித்திரம்’ என்ற ஹாஜி. மொ. அ. ஷாஹூல் ஹமீது லெப்பை அவர்களுடையது. இதன் இரண்டாம் பதிப்பு 1951இல் வெளிவந்தது.

தழுவல் நூல்கள்

ஒரு நூல் மிகவும் சிறப்புற்று விளங்கினால் அதன் மையக்கருத்தைத் தழுவிப் பல சிற்றிலக்கியங்கள் எழுதுவது தமிழ் இலக்கிய மரபு. இவ்வாறே ‘சீறா’விற்கும் பல நூல்கள் தோன்றின.

சீறா கீர்த்தநம்

செய்யிது அபூபக்கர் புலவர் அவர்கள் சீறாவைப் பின்பற்நி நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றைச் ‘சீறா கீர்த்தநம்’ என்ற தலைப்பில் பாடியுள்ளார். இது 1934-க்கு முன் மூன்று பகுதிகளாக வெளிவந்துள்ளது.

சீறா நாடகம்

யாழ்ப்பாணம் சாமுனா லெப்பையவர்கள் குமாரர் சேகுத்தம்பி புலவர்களால் இயற்றப்பெற்றது ’சீறா நாடக மென்னும் ‘காரணமாலை’. கலித்துறை, கொச்சகம், கண்ணி