பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/411

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

405

 என இருவரையும் அறிமுகம் செய்யும் கவிஞர் அன்னை ஆமினாவை, -

"அறத்தினுக்கு இல் இடம் அருட்கோர் தாயகம்
பெருத்திடும் பொறுமையில் பூமிக்கு எண்மடங்கு
உறைப்பெறும் குலத்தினுக்கு ஒப்பிலாமணி
சிறப்பினுக்கு உவமையில்லாத செல்வியே." [1]

எனச் சித்தரித்துக் காட்டுகின்றார்,

'அறத்தினுக்கு இல் இடம்’ எனும் தொடர் அறத்தின் உறையுள் பொருள் பயப்பதுடன் அறத்திற்கு (வேறு) இடம் இது என அமைந்தும் இன்பம் செய்கின்றது. அருளுணர்ச்சிக்குத் தாயின் சுகத்தைக் காட்டிலும் சிறந்த இடம் வேறுளதோ? பொறுமைக்குப் பூமி என்பர்: உமறுப்புலவரோ பொறுமையில் பூமிக்கு எண்மடங்கு என்கின்றார். குல நலத்தில் ஒப்பில் லாத மணி என்னும் சிறப்பிற்கு உவமையில்லாத செல்வி (திருமகள்) என்றும் கூறுவதில் அறநலமும் அருள் நலமும் பொறை நலமும் குல நலமும் எழில் நலமும் இனிய முறையில் நிறைவுடன் கூறப்படுகின்றன. ஒப்பில்லை என்று உணர்த்துவதால் இது பொது நீங்கு உவமையாகும்.

பிறப்பும் சிறப்பும்

காப்பிய நாயகரின் பிறப்பைக் கூறும்போது உமறின் உவமை சிறப்படைந்து உயர்ந்து விடுகின்றது.

"நெறிநிலை திரியா மருண்மதம் மிகுந்து
  நெடுநிலம் எங்கணும் பரந்து
துறவறம் தவறி இல்லறம் மடிந்து
  சுடரிலா மனையது போலக்
குறைபடும் காலம் இருளெனும் குபிரின்
  குலமறுத்து அறநெறி விளக்க

  1. 1. சிறா. நபியவதாரப் படலம் 91