பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/413

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

407

“தீனெனும் பயிர்க்கோர் செழுமழை எனலாய்
மானிலம் தனக்கோர் மணிவிளக்கு எனலாய்
முகம்மது நபி பிறந்தனரே”[1]

எனும் பாடலில் பெருமானார் பிறந்த பாலைவன நாடும் மக்கள் வாழ்வும் புலவரின் கற்பனை அனுபனத்திற்கு வருகின்றன. கடும் கோடை; கொளுத்தும் வெயில்! மரங்கள் இல்லை; இருந்தாலும் சருகிக் சுவடுகளாகக் காணப்படுகின்றன. பயணம் செய்வோர் படும் துன்பத்திற்களவேது. இவ்வேளையில் திளைத்துப் படர்ந்து தழைத்த தருத் தோன்றி கொழு நிழல் தருமனால் எவ்வளவு சுகம் தரும்! தீராத பாவப்பிணியைத் தீர்த்திடும் கிடைத்தற்கரிய மருந்து கிடைத்தால் எவ்வளவு வலம் தரும்? செத்துமடியும் பயிருக்குச் செழுமழை பொழிந்தால் எவ்வளவு வளம் பிறக்கும்? இருள் சூழ்ந்த வேளையில் புகை தோன்றா மணியிற்குந் தோன்றினால் எவ்வளவு ஒளி பிறக்கும்;

தருநிழலாகவும், அருமருந்தாகவும், கெழுமழையாகவும், மணிவிளக்காகவும் காட்டிய புலவர் குறைஷில் குல திலகமாகவும் தீட்டி விடுகின்றார். இதன் கண் ஐந்து உவமைகள் பொருந்தியுள்ளன. இவ்வாறு பல உவமைகள் வருவதனைப் பல்பொருள் உவமை என்பர்.

‘தீனெனும் பயிர்க்கு ஓர் செழுமழை எனலாம்’ என்பதால் இஸ்லாம் எனும் சன்மார்க்கம் ஏற்கெனவே (ஆதம் நபி முதல்) இருந்து வந்தது என்பதும் இடையில் இச் சன்மார்க்கப் பயிர் வாடி வதங்கிக் கிடந்தது என்பதும் இறுதி நபியின் பிறப்பால் இது செழிப்பும் சிறப்பும் அடைந்தது என்பதும் உணர்த்தப்படுகின்றன.

பாலும் பல கலை அறிவும்

பிறந்த நாயகக் குழந்தையை அன்னை ஆமினா அள்ளியெடுத்து அரவணைத்துப் பாலமுதம் ஊட்டினார். (ஏழு நாட்

  1. சீறா. நபியவதாரப் படலம். 92