பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/416

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

410


காட்டின எனக் குறிப்பிடுவின் றார், கற்பனையிற்சிறந்த கம்பரும் தம் கற்பனைக் கொடியைப் பறக்கவிடுகின்றார். இராம னும் இலக்குவனும் கெளசிக முனிவருடன் மிதிலைக்கு வருகின்றனர்; வில்லினை முறித்து மன்னியல் சீதையை மணமுடித்து மகிழ்வூட்ட வருகின்றர்ர். ஆதலின் மிதிலை நகரக் கொடிகள் அவர்களை வருக! வருக! என வரவேற்றுக் கையசைப்பதாகக் கூறுகின்றார். வில்லிப்புத்துராரும் பாரதியாரும் கொடிக் காட்சிகளை தம் காப்பியங்களில் அமைத்திருக்கின்றனர். காப்பியக் கவிஞராகிய உமறுப்புலவரும் பறக்கும் கொடிகளில் கற்பனையைச் சிறக்க விடுகிறார்

வளம்பெருக்கம் வாணிகம் செய்யும் பொருட்டு நாயக வாலிபர் சாம்நகர் நோக்சிச் செல்கின்றார்கள்.அந்நகரத்துக் கோட்டை மதிலும் மாடங்களிலும் கொடிகள் பறக்கின்றன. அவற்றின் அசைவில் மூன்றுவகைக் கற்பனைகளை அமைத்து அகமகிழ்வூட்டுகின்றார்.

பேரொளி வீசிப் பெருமானார் வருகிறார்கள். 'ஷாம் நகரப் பெருமக்களே! காணிக்கையுடன் எதிர் சென்று வரவேற்புப் பளித்து கடைத்தேறுங்கள்’ எனக் கையசைத்துக் காட்டுவதுபோல் கோட்டைகளில் பறக்கும் கொடிகள் அசைகின்றனவாம். மாடங்களில் கட்டியிருக்கும் கொடிக்கரங்கள் கலகங்கள் பொருந்திய பளிங்கு மாளிகையின் மாடங் களில் படிந்துள்ள தூசிகளைத் துடைத்துப் புதுப்பித்து அழகு படுத்துகின்றனவாம்.

மாடங்களின் மேல்நிலைகளில் கட்டியுள்ள மற்ற கொடிகளோ 'மா நபியே இம் மாநகருக்கு வருக! வருக!' என்று கையசைத்து வரவேற்கின்றனவாம்.

கற்பனையில் ஷாம்நகரில் பறக்கும் அக்கொடிகள் இதோ!

"முதிர்ந்த பேரொளி முகம்மது வருநெறி முன்னி
எதிர்ந்து இறைஞ்சுதற்கு இந்நகர் உறைந்திடும் அரசீர்"