பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/422

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

416


காரணத்தால் பொல்லாக் குறைஷியர் பகைமிகுந்து பொங்கி எழுந்தனர். பிறந்த பொன்னகரை விட்டுப் புறப்பட்டு வந்தபோதும் சும்மா விடவில்லை. படையெடுத்து வந்து பகை தொலைக்க முற்பட்டனர். அம் மாநகர் தீய வரின் தாக்குதலிலிருந்து தற்காப்புச் செய்து கொள்ளும் கட்டாயத்திற்குள்ளானார்கள் போர்க்களம் செல்ல ககுபு என்னும் குதிரையைக் கொண்டு வரச் சொன்னார்கள். அக்குதிரையின் ஆற்றலை சிறப்பை அரிய உவமைகளை அடுக்கி அருமையாகப் பலப்படுத்துகின்றார்.

"தாவிடின் மனத்தை ஒக்கும்
    தாக்கிடின் இடியேறு ஒக்கும்
மேவிடின் திகிரி ஒக்கும்
    பூவிடத்து அட் லின் வன்கூழ்
போன்றிடும் சகுபு என்று ஒது
    மாவினைக் கொணர்மின் என்ன
முகம்மது சரணம் வைத்தார்." [1]

சிறந்த தளபதி ஏறிய சிறந்த குதிரை களம் நோக்கிப் புறப்பட்டது. இதன் கடுகிய செலவை.

"கடலினைக் கலக்க என்றோ
   கதிர்துகள் படுத்த என்றோ
வடவரை தகர்க்க என்றோ
   மண்ணிலம் பிளக்க என்றோ
அடையலர் பதியை இன்னே
   அந்தரத்து இடுக என்றோ
தடமுறும் கடின வாசி
   தாள் பெயர்த்து இட்டது அம்மா!" [2]

இதன் கண் பொருள் வெளிப்படையாக உள்ளது.

ஐந்து செய்திகள் அமைந்துள்ளன. கடலைக் கலக்குதற்கே

  1. 1. சீறா. பதுறுப் படலம் 21
  2. 2. சீறா பதுறுப் படலம் 22