பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45

என்ற பாடலில் உமறுப்புலவர் தரும் பயனுடைய செய்தி 'கருத்தனைப் பொருத்துதல் கருத்தே' என்பதாகும்.

உமறுப்புலவர் கர்த்தனை மட்டும் பொருத்கிக் கொள்கின்ற விருப்பத்தில் இப்பாடலைப் பாடியிருப்பதாகக் கொள்வது வழுமையாகாது. கார்த்தனை,நூலினைப் படிக்கின்ற,படிக்கச் சொல்லிக் கேட்கின்ற அனை வருடைய மனத்திலுமே கர்த்தனைப் பொரு ர் துதல் தமது கருத்தாகப் பாடுகின்றார் உமறுப்புலவர் என்பதே நிறைவு டைய பொருளுடையதாகும். முகம்மது நபி (சல்) அவர் களின் வாழ்க்கையை தாம் சீறாப்புராணம் என்கின்ற பார காவியமாகப் படைப்பதன் கருத்து, பெருந்துவம் !ாந்த கருத்தனை எல்லோருடைய மனத்திலும் பொருத்துகின்ற கருத்தில்தான் என்பதை, பாயிரமாக அமைத்து திறவினும் திருவாய் என்று தொடங்கும் பாடலை உமறுப்புலவர் பாடியிருக்கிறார் என்பதே சரி.

இந்த நோக்கில் கொண்டால் சீறாப்புராணத்திற்கு, உமறுப் புலவர் பாயிரம் பகரவில்லை என்கின்ற குறையும் நீங்கும்.

"திருவினும் திருவாய்......" என்று தொடங்குகின்ற உமறுப் புலவரின் சீறாப்புராண முதற் பாடல், கடவுள் நிலைக்கு இலக்கணமாக அமைந்திருப்பது ஒன்று. அத்தகு இறைவனை எல்லோருடைய மனத்திலும் பொருத்துவது கருத்து என்னும் நோக்கம் கூறுவதாக உளது மற்றொன்று. "எத்தகு இறைவனைக் கருத்தில் பொறுத்துவது" என் கேள்விக்கு, "இத்தகு இறைவனை" பொருத்துதல் கருத்து-அதாவது, உயர்ந்தது என்று சுட்டி உரைப்பதாக உளது இன்னொன்று, 'எப்படிப் பொருத்திக் கொள்வது?' என்னும் கேள்விக்கு "இப்படியெல்லாம் பொருத்திக் கொள்ளலாம்" என விளக்கணி கூறுவது வேறொன்று. ஆக, இந்தப் பாடல் பலபட விரித்துப் பொருத்தி, பொருளுணர்ந்து நவில் தோறும் நயம் காண்கின்ற தன்மையுடையது. இதுபோன்ற அரிய பாடல்களை. தமிழில் மட்டுமின்றி பிறமொழிகளிலும் கூடக் காண்பது அரிதே!