பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46


இதுபோன்று பயில்தொறும் புதுப்புது இன்பம் தருகின்ற பாடல்சள்-தமிழ்ச் சுவை, பொருட்சுவை, இலக்கண நயம், இலக்கிய மணம் கமழ்கின்ற பாடல்கள்-நூற்றுக் கணக்கில் சீறாப்புராணத்தின் கண் உள, விரிவஞ்சி ஒரு பாடலுடன் முடிக்கின்றேன்.

காப்பியம் படைக்கின்ற வாய்ப்பினைத் தமிழ்மொழி இழந்துநின்ற காலத்திலே தோன்றியவர் உமறுப்புலவர். ஆனால், வளமான காப்பியங்களைப் படைத்தளிக்கின்ற தகுதியுடையதாகத் தமிழ்மொழி திகழ்ந்த காலத்தே வாழ்ந்த புலவர்களின் வரிசையிலே முதலிடம் வகிக்கும் தன்மை பெற்றவராகத் திகழ்கின்றார். இதற்குச் சான்றாக அவர் படைத்தளித்துள்ள சீறாப்புராணம் விளங்குகின்றது.

'விதியவன்' போன்ற புதிய சொற்கள் பலவற்றைத் தந்து தமிழைச் சிறப்பித்திருக்கிறார். 'வள்ளியோர்' போன்ற பல சங்க சாலத் தமிழ்ச் சொற்களையெல்லாம் எடுத்தாண்டு, தமிழ்ச் சொற்கள் வழக்கற்றுப் போகாமல் காப்பாற்றட்படுகின்ற பணியையும் புரிந்திருக்கிறார். 'கரிப்பு' என்பதையொத்த சில சில கிராமிய வழக்குச் சொற்களையும் கையாண்டு, மக்களிடையே பேச்சு வழக்குச் சொற்களையும் இலக்கியத்தின் இடையே அவசியம் கருதி அங்குமிங்குமாக ஒன்றிரண்டு சொற்களைக் கையாளலாம் என்றும் காட்டியுள்ளார். பாத்திரங்களின் உரையாடல்கட்கு ஏற்ற அமைப்புக் களைக்கொண்ட யாப்புகளிலும் பாடல்கள் புனைந்துள்ளார். பாத்திரங்களின் குணங்களை விளக்குகின்ற சொற்களிலும் பாடல்கள் சில அமைந்திருக்கின்றன, ஈடு இணையற்ற தன்மையிலே இயற்கை வருணனை புரிந்திருக்கிறார். இசைக் கருவிகளின் ஒலிகளை யொத்தும் மிருகங்களின் தொனிகளைப் போன்றும் ஒலிக்கின்ற பாடல்களும் இருக்கின்றன. ஆக-,

தனக்கு முன்னோர்களை மதித்து. அவர்களை விஞ்சும் வகையிலே பாடல்கள் புனைய முயன்று வெற்றியும் கண்டிருக்கிறார் உமறுப்புலவர். மொத்தமாக-,