பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47


தன்னையொரு ஈடிணையில்லா மகாகவியாக ஆக்கிக் கொள்வதில் முயன்று வென்று திகழ்கின்றார் உமறுப்புலவர். விருத்தப்பாக்களை சந்தப்பாக்களாகத் திகழப் படைத்துள்ள பெருமையும் உமறுப்புலவருக்குண்டு. குறிப்பாக-,

பிற்காலப் புலவர் ஒருவர் முற்காலப் புலவர்களை விஞ்சும் வகையில், காவியம் படைத்தளித்துள்ள பெருமை உமறுப்புலவரை மட்டுமே சாரும்.

உமறுப் புலவர், சீறாப்புராணம் பாடியுள்ள காலத்தின் நிலைமையை வைத்து நோக்கும்போது-நோக்க வேண்டும்-சீறாப்புராணம் ஒரு அரிய படைப்பு: தமிழ்த்தாய்க்கு ஒரு புதிய அணிகலன்; தமிழர்கட்கு ஒரு புத்தொளிக் கருவூலம். தமிழர்கள் அனைவரும் படித்து உவக்க வேண்டிய பாரகாவியம் சீறாப்புராணம். தமிழர்கள் அனைவரும், சாதி சமய பேதமின்றி, கொண்டாடப்படவேண்டிய மகாகவி-புலவர் உமறுப்புலவர். இந்த உலக மகா கவிஞரை-புலவரை-மாணவர்கள் கற்றுத்தேர்வது தமிழ் வளர்ச்சிக்கு ஊக்கம் தருவதாகும். இதற்கு வழிகாண்பது நமது கடமை.