பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55


இருக்கும்? சக்கரவாளக்கிரியைக் கோட்டை மதிலாகவும், ஆழ்கடலைக் கோட்டையின் அழகாகவும் கொண்ட இடம் எப்படி இருக்கும்? பாம்பரசனாகிய ஆதிசேடனின் முடியிலுள்ள நாகரத்தினத்தைப் பார்த்தால் எப்படியிருக்கும். அப்படி நிகறற்று விளங்குகிறது மக்கமா நகரம் என்கிறார் அவர், மேருமலையைப் பல இடங்களில் உமறுப்புலவர் குறிப் பிட்டிருக்கிறார்.

அவ்வாறே காளியையும் சீறாக் காவியத்தில் பார்க்கிறோம். நாட்டு, நகரப் படலங்களில் தமிழ்நாட்டுப் பின்னணிகளை ஆசை திர பாடித் தீர்த்த உமறுப்புலவர் பாலை நிலத்தைப் பாடும்போது காளியின் சித்திரத்தைக் கண் முன்னே நிறுத்துகிறார். காளியை பாலை நிலத்துக்குரிய கடவுளாகவும் பேய்களை அவருடைய படைகளாகவும் பாடப்படுவது தமிழ் மரபு இதையே உமறு,

"மூவிலை நெடுவேற் காளி வீற்றிருப்ப முறைமுறை நெட்டுடற்கரும்பேய்
ஏவல் செய்து உறைவது அலது மானிடர்கால்இடுவதற்கு அரிது..."

என்று சுரத்தில் புனலழைத்த படலத்தில் பாடுகிறார்.

இதில் என்ன சிறப்பு என வினவலாம், ஒரு தமிழ் புலவன் உவமையாகவோ, உருவகமாகவோ மேருவையும் ஆதிசேடனையும், இலட்சுமியையும் எடுத்தாள்வது புதுமையல்ல என்றாலும், ஓர் இஸ்லாமியத் தமிழ், காவியத்தில் ஒரு முஸ்லிம் தமிழ்ப் புலவனால் பேசப்படுவது சிந்தனைக்குரியது. மற்ற முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் அணுகாத ஒர் அரிய முயற்சி இது. உமறுவின் தனிப்பெரும் பண்புகளில் இதுவும் ஒன்று.

மற்ற காவியப் புலவர்களைப் போலவே உமறுப் புலவரும் ஒரு இலட்சிய உலகைப் படைத்துக் காட்டுகிறார். கம்பனின் கோசலமும், திருத்தக்கத் தேவரின் ஏமாங்கதமும் பொன் உலகங்களாகப் படைக்கப் பட்டிருக்கின்றன. இவ்விரு புலவர்களும் அயோத்தியையும், ஏமாங்கத நாட்டை