பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64


வோர் தங்கள் மதக் கொள் கைப்படி வீட்டு வழியைக் கூறவர் இந்த மரபுப்படியே உமறுப்புலவரும் தம்முடைய இஸ்லாம் மதக் கொள்கைப்படி வீட்டு நெறியைக் கூறுகிறார். மற்ற அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றும் எல்லாச் சமயத்தார்க்கும் பொதுவாகையால் அவற்றில் வேறுபாடு இல்லை.

தமிழ்க் காவியங்களில் கொடக்கத்திலே நாட்டுப் படலம், நகரப்படலம் என்று இரண்டு படலங்களைக் கூறுகிற மரபு உண்டு. இவை காவியத் தலைவனுடைய நாட்டுச் சிறப்பையும் நகரச் சிறப்பையும் கூறுகின்றன. நாட்டுப்படலம், நகரப்படலம் கூறுகிற மரபைத் தமிழில் முதன் முதலாக அமைத்தவர் கி.பி. 6ஆம் நூற்றாண்டிலிருந்த திருத்தக்கத் தேவர் என்னும் ஜைன சமயத்தவர். திருத்தக்கத்தேவர் தாம் இயற்றிய சீவக சிந்தாமணி என்னும் காவியத்தில் முதலாவதான நாமகள் இலம்பகத்தில் நாட்டு வளம், நகர் வளம் என்னும் இரண்டையும் முதன்முதலாகக் கூறினார். அவர் காட்டிய வழியைப் பின்பற்றி பிற்காலத்துப் புலவர்களும் தங்களுடைய காவியங்கள் நாட்டுப்படலம், நகரப்படலங்களைக் கூறினார்கள். (சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய ஆதி காவியங்களில் நாட்டுப்படலம், நகரப்படலங்கள் கூறப் படவில்லை. ஏனென்றால், அக்காலத்தில் இந்த மரபு ஏற்படவில்லை).

உமறுப்புலவரும் தம்முடைய சீறாப்புராணத்தின் தொடக்கத்தில் நாட்டுப்படலம், நகரப்படலம் ஆகிய இரண்டையும் கூறியுள்ளார் நாட்டுப்படலத்தில், நபிகள் நாயகம் அவர்கள் பிறந்து வாழ்ந்த அரபு நாட்டின் சிறப்பைக் கூறுகிறார் . நகரடபடலத்தில் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த மக்கமா நகரத்தின் சிறப்பைப் பாடுகிறார். நாட்டுப்படலத் தைப் படிக்கும்போது, அதில் அரபு நாட்டு இயற்கை வளம கானப்படாமல் தமிழ நாட்டின சூழ்நிலைதான காணப்படுகிறது. குறிஞ்சி,முல்லை, மருதம்,பாலை,நெய்தல் என்னும் ஐந்து வகையான நிலப பகுபாடுகள் எல்லா நாட்டுக்கும்