பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66


இருங்கண வெள்ளை மேகம் இரைபசுங் கடல்வீழ்ந்துண்டு ஒர்
கருங்கட லெழுந்த தென்னக் ககனிடைசெறிந்து மீண்ட"[1]

நபிகள் நாயகத்தின் புகழ் உலகமெங்கும் பரந்து மேலும் பரவ இடமில்லாமல் வானத்திலும் சென்று பார்த்திருந்தது. அதுபோல மேகமானது வானத்திலே எங்கும் பரந்து விட்டது பிறகு நபிகள் நாயகம் அவர்களின் அரு ட்கொடையைப் போன்று மேகமானது மழையைப் பொழிந்தது என்று புலவர் கூறுவது மிகச் சிறப்பாக இருக்கிறது. நபிகள் நாயகத்தின் புகழுக்கு மேகமும் அவருடைய அருட் கொடைக்கு மழையும் உவமிக்கப்படுவது காண்க.

இந்தச் செய்யுளில் நபிகள் நாயகம் நயினார் என்று உமறுப்புலவர் சிறப்பித்துக் கூறுகிறார். நபிகள் நாயகத்தை நயினார் என்று கூறுவதில் உமறுப்புலவர் பெருமிதங் கொள் கிறார். இச்சொல்லை சீறாப்புராணத்தில் பல இடங்களில் வழங்கியுள்ளார். அவற்றில் ஒன்றை மட்டும் எடுத்துக் காட்டுவோம்.

"அரவினை வதைத்த கரதல நயினார்
அருங்கரம் பொருத்திய நயினார்
பரல்செறி சுரத்தில் புனல்தரும் நயினார்
பணி பணிந்திட வரும் நயினார்
வரியளி உலம்பும் புயனபுல் காசீம்
மனத்துறை வரிசை நம் நயினார்
தேரிமலர் கதீஜா நாயகி நயினார்
செல்வமுற் றினிது வாழ்ந் திருந்தார்."[2]

இவ்வாறு, நபிகள் நாயகம் அவர்களைப் புலவர் பெருமான் நயினார் என்று சிறப்பித்துக் கூறுவதைப் பல இடங்களில் காணலாம்,


  1. 1. சீறா, நாட்டுப் படலம் 1
  2. 2. சீறா. மணம்புரி படலம் 118