பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73

யத்தின் அல்லது கவிதையில் அடிக்கூறுகளாகக் கருதத்தக்கள் மூன்று. அவை உருவம், உள்ளடக்கம், உணர்த்துமுறை.

உருவம் என்பது கவிஞன் பாட்டை வனையும் முறை. யாப்பு என்பதும், வடிவம் என்பதும் இதனைத்தான். கவிதை தனக்குள் அடக்கி இருக்கும் கருத்கே உள்ளடக்கம், அதனைப் பாவிகம் எனலாம். உள்ளத்தில் பொங்கி வழியும் அனுகூலத்தை உணர்ந்த அளவில், நினைந்த பொருளில் கவிஞன் வெளிப்படுத்திக் கையாளும் லாவகமே, பாவமே. உத்தியே உணர்த்து முறை. மணப்பெண்ணின் அழகைப் போன்றது உருவம். அவளது அறிவுத் தகுதியை போன்றது உள்ளடக்கம் அவளுக்குரிய குணங்களுக்கு நிகரானது உணர்த்து முறை. நல்ல மணப்பெண் அழகு, அறிவு, குணம் மூன்றும் பெற்றிருத்தல் வேண்டும் என்று எல்லாரும் விரும்புவர். கவிதை உருவம், உள்ளடக்கம், உணர்த்துமுறை என்ற மூன்றையும் பெற்றிருத்தல் வேண்டும் என்று எல்லோரும் விரும்புவர்

சீறாவின் உருவம்

சீறாப்புராணப் பாக்களின் உருவம், உள்ளடக்கம் உணர்த்து முறை என்ற மூன்றின் பாங்கையும் விண்டுரைத்தால் அவையே உமறுப்புலவரின் இலக்கியத் திறனை எடுத்துணர்த்தும் கவிஞர் தம் கட்டுப்பாடு வருத்தத்தைப் போக்கும் ; நீக்கும், வளமை சான்ற யாப்பு விருத்த யாப்பு. பாவலனின், எண்ண ஓட்டத்திற்குத்தக நெகிழ்ந்து கொடுத்து படைப்பவனுக்கும் படிப்பவனுக்கும் மகிழ்வு ஊட்டுவது விருதப்பாவின் இயல்பு. உமறுப்புலவர், தம் காவியத்தை 5027 திருவிருத்தங்களாகப் படைத்துள்ளார். எண்ணங்கள், பாட்டு வடிவத்தில் வந்து விட்டால் போதும்-கவிதை பிறந்து விட்டது என்று கருதலாம். கதறலாம் என்பது இல்லை. யாப்பு வடிவத்தில், சில கவிதைகள் 'இறந்து' கூடப்பிறக்கின்றன. வெற்றுச் செய்திக்குறிப்புகள், யாப்புக் கோப்பில் உய்தி பெறுகின்றன. ஆனால் அவை எல்லாம்