பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74


பாக்கள் அல்ல. பாட்டுருவத்தில் நடிக்கும் பகட்டுகளே? பின்னே பாட்டின் உருவம் எப்படி இருத்தல் வேண்டும்? பாட்டின் கருப் பொருளுக்குத்தக, அதன் வடிவமும் வனையப் பட்டிருத்தல் வேண்டும். கவிஞன் பேசும் பொருள், பல திறத்தது. காதல், அவலம், சினம் என எல்லா உணர்வு களும் அவன் கவிதைகளில் பொங்கித் ததும்பும். உணர்த்த வரும் உணர்விற்குத்தக, அவன் பாடும் கவிதைகளும் அழும்; விழும்; எழும்; சிரிக்கும்; குதிக்கும்.

சீறாப்புராண உருவ வெற்றிக்கு ஒரு சான்று.

நபி அவதாரப் படலத்தில் நபியின் அவதாரம் அறிந்து அந்தன் பொன்னகர் அனைத்தும் அணி செய்யப்படுகின்றது; ஊர் எங்கும் விழாக் கோலம். இதனை அறிகிறான் 'இபுலீசு’ வேந்தன். அவன் நடுங்கினான்; வாயில் நீர் வறண்டது: நா உலர்ந்தது. உடலும் ஒடுங்கியது; ஐம்பொறி மயங்கியது; நெஞ்சம் உடைந்தது. நெடுமூச்சுச் சுழன்றது. அப்போதைய அவனைப் பாவலர் படம் பிடிப்பதைப் பாருங்கள்:

'கரைவன் ஏங்குவன் மலங்குவன் கலங்குவன் கதறி
இறைவன் கன்னத்தில் கையை வைத்திருந்துஎழுந்திருப்பான்"[1]

இங்ஙனம் உணர்விற்குத் தக்கவாறு, சொல்லவரும் பொருளுக்குத் தக்கவாறு துடிக்கும் பாடல்கள் பல சீறாப் புராணத்தில் விரவிக் கிடக்கின்றன.

நாட்டு வளத்தைக் காட்டவரும் ஒன்று, எப்படி ஒலியோடும் சுவையோடும் படம் பிடிக்கிறது பாருங்கள்:

"குருகின மிரியப் புள்ளினம் பதறக்
கொக்கினம் வெருவிட வெகினம்
விரிமலர்க் கமலப் பாயல்விட் டகல
மென் சிறைப் பெடையணந்துடிப்பச்
சொரிமதுத் துளித்துக் குவளையாய் சிதறச்


  1. 1. நபி அவதாரப் படலம் 22