பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75


சுருட்டிவால் விசைத்திடத் துள்ளி
வரிவராற் பகடு வளைநில வெறிக்கு
மடைத்தலை கிடந்துமூச் செறியும்"[1]

உள்ளடக்கம் : இலக்கியம் எதனைச் சொல்ல வருகிறது ஒன்றோ பலவோ - எனக் கருத்துச் சொல்ல வருகிறது. அந்தக் கருத்தே கவிதையின் உள்ளடக்கம், உள்ளீடு, கொளு, பொருள், விஷயம், கரு, பாவிகம் என்று அதனை எப்படி எேண்டுமானாலும் குறிப்பிடலாம் -பிறனில் 'விழைவோர் கிளையொடும் கெடுப' என்பது இராமயாணக் கருப் பொருள். 'பொறுமையிற் சிறந்த கவசம் இல்லை' என்பது பாரதப் பொதிபொருள்; 'வாய்மையிற் கடியதோர் வாளி (அம்பு) இல்லை’ என்பது அரிச்சந்திர புராண அடிப்பொருள், அரசியல் பிழைத்தோாக்கு அறங்கூற்று ஆவதும், உரை சால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவதும், ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதும் சிலப்பதிகார உள்ளீடுகள். நபியின் நீதிப் பாட்டையை எடுத்துக்காட்டி நிலைநாட்டுவதே சீறாப்புராண நோக்கம், இதில் வரலாறு தலைக்காட்டினும் அது கருத்தாறுக்குக் கரை என்றே கருதுதல் வேண்டும். கறை-என்று கருதுதல் ஆகாது; குறை என்று குமுறுதல் கூடாது.

உணர்த்துமுறை : இலக்கியம் பாடப்படும் உருவம், இலக்கியத்தில் அடங்கியுள்ள உள்ளடக்கம். இவற்றைவிடக் கவிதை சொல்லப்படும் முறையே ஓரிலக்கியத்தின் கவிதை வெற்றியைக் கணிக்கிறது. எனவே, உருவம், உள்ளடக்கம் என்ற இரண்டையும விட உணர்த்து முறையே இலக்கியத்தின் இதயம் ஆகிறது.

உணர்த்து முறை, உத்தி, பாணி பாவம் எல்லாம் ஒரு கருத்தைக் குறிப்பனவே, உணர்த்து முறைக்குக் கொடுக்கப்படும் முதன்மையைக் கொண்டு மற்ற உருவம், உள்ளடக்கம் ஆகியன கவிதைக்குத் தேவையானதே அல்ல என்று முடிவு


  1. 1. நாட்டுப் படலம் 35