பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

மாக ஹலரத் அப்துல்லாவிடம் கொடுக்க, அதள் வலிமை "விண்ணினைப் பிளக்கும்? நீண்ட மேருவைப் பிளக்கும்." . [1] படியாக இருந்தது என்று கவிஞர் பாடுகிறார். அரபுநாட்டில் ‘மேரு' எப்படி வந்தது?... கவிஞரின் மரபுப் பழக்கத்தால்; அதுபோல நபிகளை "வரிசை நபியே முகம்மதுவே, வானோர்க்கரசே புவிக்கரசே![2] என்றும், ஆதிதன் தூதே பேரின்ப விளக்கே! அமர் உலகினுக்கும் நல் அரசே'"[3] என்றும் கூறுவதால் தேவருலகத்தைக் கூறும் தமிழ் வழக்கம் சுட்டப்படுகிறது. "ஒருவனே நாயன் மற்றொழிந்த தேவதம் இருமையும் பேறு இலாது இழிவு கொண்டது" என்று நபிகள் கூறுவதாகக் கவிஞர் பாடுவதால் இம்மை மறுமை கூறும் தமிழ் வழக்கமும் குறிக்கப்படுகிறது. தமிழிலக்கியங்களிலும் வழக்கிலும் பாற்கடல் அமுதம் வந்து சுவையூட்டுதல் மிகுதியும் உண்டு. அரபு நாட்டில் 'அமுதம்' இல்லாமலா போய் விடு ? நபிகளின் ஊர்வலத்தைக் காணும் பெண்களை, "ஆரவாருதியில் தோன்றும் அமுதனார்"[4] என்றும், கதீஜாப் பிராட்டியை "ஆரணக் கடலுக்கு அமுதநாயகியை"[5] என்றும் குறிப்பிட்டு அரபு நாட்டில் தமிழமுதம் தருகிறாரே இத் தமிழ்க் கவிஞர்! அடுத்து வருகின்ற நிகழ்ச்சிகளை முன் கூட்டியே அறிந்து கொள்ளும் வகையில் மங்கையர்கள் கனவு காணும் வழக்கமும் தமிழிலக்கியங்களில் உண்டு. இது நன்னிகழ்ச்சிக்கும் அஃதல்லாத நிகழ்ச்சிக்கும் பொருந்தும். அதற்குப் 'பலன் கூறுதலும்' உண்டு.

"வாரணமாயிரஞ் சூழ வலம் வந்து
நாரணநம்பி நடக்கின்றான்"[6]

என்று சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள் கண்ட கனவினையும், தீ நிமித்தக் கனவாக,


  1. 1.சீறா உகுதுப் படலம் 200
  2. 2. சீறா. உமறுகத்தாபு ஈமான் கொண்ட படலம் 90
  3. 3. சீறா. மதியை அழைப்பித்த படலம் 180
  4. 4. சீறா. மணம்புரி படலம் 62
  5. 5. சீறா. மணம்புரி படலம் 111
  6. 6.சீறா நாச்சியார் திருமொழி, வாரணமாயிரம் 1