பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/99

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

93


"குடை யொடு கோல் வீழ"[1]
--கோப்பெருந்தேவி கண்ட கனவினை யும் காண் கிறாம்.

இப்பழக்கம் அரபு காட்டில் உண்டோ,இல்லையோ?ஆனால் உமறு தரும் அரபு நாட்டில் நிச்சயமாக உண்டு.கதீஜாப் பிராட் டி கனவு காணுகிறார்! என்ன கனவு? இதோ கவிஞர்; ஒரு மரபானது,

"வயிரவேர் ஊன்றிச் சேர்ந்த
மானிக்கப் பனர் விட் டோடி
இயன் மர ககத்தின் சோதி
இளந்தளிர் குழைப்ப ஈன்று
நயனுறு நகரை மூடி
நற்கனி யுகுத்து வாசச்
செயமலர் இடைவிடாது
சிரமிசை சொரிய மாதோ!"[2]

-இக் கனவைக் கேட்டதுமே மிக இனிமையான செயல் ஒன்று நடக்கப் போவதாக நமக்கும் தெரிகிறதல்லவா? அதன்படியேதான் அக்கனவுக்கு நற்பலனும் கூறப்படுகிறது- அதன்வழியே தபிகளுடன் கதீஜாவுக்குத் திருமணமும் நிறைவேறுகிறது!

'திருஷ்டி கழித்தல்-என்பது தமிழ் நாட்டுத் தாயார் மேற்கொள்ளும் தொன்று தொட்ட முறை, தன் குழந்தையின் சிறப்புகளை மற்றவர் பார்த்து மகிழ்வதோடு பாராட்ட வேண்டும் என்று தாய் விரும்புகிறாள். ஆனால் அதே நேரத்தில் மற்றவர்கள் தன் குழந்தையைப் பாராட்டிப் புகழ்வதால் அவர்களின் கண்பட்டுவிடுமோ என்றும் அஞ்சுகிறாள்! குழந்தை மீது அவ்வளவு அக்கறை அவளைத் தவிர வேறு யாருக்கு இருக்க முடியும்? எனவே தன் குழந


  1. 1. சிலம்பு.வழக்குரை கதை-விரி 1
  2. 2. சீறா மனம் பொருத்து படலம் 21