பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

அபராதம்
    ஏழாவது வகுப்பிலே அந்தச் சிறுவன் படித்துக் கொண்டிருந்தான். அவன் பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாக இருப்பான். உடம்பு துரும்புபோல் இருக்கும், மூக்கு அகலமாயிருக்கும். ஆகையால், மற்ற மாணவர்கள் அவனே அடிக்கடி கேலி செய்வார்கள். இதனால், அவன் யாருடனும் சேரமாட்டான். கூடுமானவரை ஒதுங்கியே இருப்பான்.
    அவன் படித்த பள்ளியில் தினசரி மாலை வேளையில் தேகப்பயிற்சி வகுப்பு நடக்கும். அந்த வகுப்பிற்கு ஒவ்வொரு பையனும் கட்டாயம் வரவேண்டும். இல்லாவிட்டால், தலைமை ஆசிரியர் விடமாட்டார். அவர்

மிகவும் கண்டிப்பாடவர்!

    சனிக்கிழமை காலையில் மட்டும்தான் பள்ளிக் கூடம் உண்டு. பிற்பகலில் கிடையாது. ஆனால் அன்றுகூட மாலையில் தேகப்பயிற்சி வகுப்பு உண்டு. எல்லாரும் சரியாக நாலு மணிக்கு அங்கு வந்துவிடவேண்டும்.
    அன்று சனிக்கிழமை. அந்தச் சிறுவனின் அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. காலையில் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும், அவன் அப்பாவுக்கு ஒத்தாசையாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அன்று மேகங்கள் சூரியனை மறைத்துக் கொண்டிருந்ததால் தேரம் தெரியவில்லை அவனிடம் அப்போது கடிகாரமும் இல்லை.
    

மணி நாலுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும், அவன் 'இன்னும் நேரமாகவில்லை' என்று நினைத்துக்கொண்டே சாவதானமாகப் பள்ளிக்குப் புறப்பட்டான். பள்ளியை நெருங்கியதும் அவன் திடிக்கிட்டான். ஏன்? தேகப்பயிற்சி வகுப்பு முடிந்து எல்லாப் பிள்ளைகளும் திரும்பு வந்து கொண்டிருந்தார்கள். பாவம் அந்தச் சிறுவன் ஏமாற்றத்துடன் வீடு வந்து சேர்ந்தான்

19