பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 ஆர்லோவ் தம்பதிகள் "இரண்டாவது விஷயம், இந்த வேலை தான். இது மிகப் பெரிய வேலை ஆகும். உதாரணமாக, யுத்தம் மாதிரி. ஒரு பக்கம் காலரா. மறுபுறம், நோயாளிகள். யாருக்கு வெற்றி: மூளேயைச் செலுத்த வேண்டிய வேலே அது. ஒவ்வொரு விஷயமும் அப்படிப்பட்டது தான். பார்க்கப் போளுல், காலரா என்பது என்ன? தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் தான் அது. அப்புறம், நம் திறமையை எல்லாம் சேர்த்துக்கொண்டு அதனுடைய பலவீனமான இடத்திலே ஓங்கிக் குத்துவிட வேண்டியது. டாக்டர் வாஷென்கோ என்னிடம் சொன்னர். அதற்காக எங்களுக் குத் தேவையான சரியான ஆள் நீ தான், ஆர்லோவ்' என்ருர். அதன் பின்னலேயே போ. அவர்களே என்னிடம் கொண்டுவா. நல்ல கசப்பு மருந்து கொடுத்துக் குணப் படுத்தி விடுவேன், கோயாளி குணம் அடைந்து விடுவான். அவன் தனது வாழ்நாள் பூராவும் எனக்கும் உனக்கும் நன்றி உள்ளவனாக இருப்பான். ஏனென்ருல், அவனைச் சாகாமல் காப்பாற்றியது யார்? காம் தான்?' என்ருர், கிரிகரி தன் நெஞ்சை கிமிர்த்துக் கொண்டு, ஒளி மிளிரும் கண்களால் தனது மனைவியை நோக்கினன். அவள் ஆசையோடு அவனைப் பார்த்துச் சிரி த்தாள். அந்தச் சமயத்தில் அவன் பார்ப்பதற்கு மிகுந்த அழகு உடையவனுகத் தென்பட்டான். அவர்களுக்குக் கலியாணம் நிகழ்வதற்கு முன்பெல்லாம் அவள் கண்டு வியந்த கிரிகரி போலவே இப்பொழுதும் தோன்றின்ை. "எங்கள் வார்டிலும் அப்படிப்பட்ட ஆட்கள் இருக் கிருர்கள். அன்பு நிறைந்த உள்ளமும் கடுமையாக உழைக் கும் பண்பும் பெற்றவர்கள். ஒரு டாக்டர் இருக்கிருர்பருமளுன பெரிய மனுவி. கண்ணுடி அணிந்தவள். மிகவும் நல்ல மனிதர்கள். ஆடம்பரமே கிடையாது. அவர்கள்