பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆர்லோவ் தம்பதிகள் 119 நம்மிடம் சொல்கிற விஷயங்களை நாம் எப்பவும் புரிந்து கொள்ள முடியும்." "ஆகவே, உனக்குக் கவலை எதுவும் இல்லையே? திருப்திதானே?" என்று கிரிகரி கேட்டான். அவனுடைய உற்சாகம் இதற்குள் ஓரளவு தணிந்திருந்தது. "எனக்கா? ஆண்டவனே! நீயே தீர்மானித்துக் கொள்ள முடியுமே. நான் பன்னிரண்டு ரூபிள்கள் பெறுகிறேன். உனக்கு இருபது. இரண்டும் சேர்ந்து, ஒரு மாசத்துக்கு முப்பத்திரண்டு ரூபிள்கள் வருகின்றன. செலவே கிடையாது. காலரா இப்படியே இருந்தால், மாரிக் காலத்திற்குள்ளாக நாம் எவ்வளவு பணம் சேர்த்துவிட முடியும். என்று பாரு. ஆண்டவன் அருள் இருந்தால், நாம் நம்முடைய அந்த அடித்தளத்து இருட்டறையை விட்டு வெளியே வந்துவிட வகை செய்து கொள்ளலாம்." "உம்ம். இதுவும் யோசிக்க வேண்டிய விஷயம் தான்" என்று கிரிகரி சொன்னான். அப்புறம் சிறு தாமதத்திற்குப் பிறகு, ஒரு வித நம்பிக்கை எழுச்சியினால் தூண்டப் பெற்று அவன் தன் மனைவியின் முதுகில் தட்டிக் கொடுத்தான். மேட்ரோனா! வருங்காலத்தில் நமக்கும் நல்ல காலம் பிறக்கும். நீ உன் முகத்தை தொங்கப் போடாமல் இருந்தால் போதும்!" என்று உற்சாகத்தோடு சொன்னான். அவள் மகிழ்ச்சியுற்றாள். "நீ மட்டும்...." என்று ஆரம்பித்தாள் அவள். அதைப்பற்றி ஒரு பேச்சும் வேண்டாம். தோலுக்கு ஏற்ற ஊசியை எடு: காலுக்கு ஏற்ற செருப்பைத் தேடு நம் வாழ்க்கை மாறிப்போனால் அதுவும் மாறிவிடும்."