பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/133

இப்பக்கத்தை, மெய்ப்புப்பார்க்க தேவையில்லை

122 ஆர்லோவ் தம்பதிகள் - செயலை செய்ய வேண்டும் எனும் ஆசை அவனுள் பிறந் த்து. இது ஏறக்குறைய திடீரென்று தானும் ஒரு மனிதப் பிறவி தான் என்று தானாகவே உணர்ந்து கொள்கிற ஆனாலும் தனக்கு முற்றிலும் புதிதான அந்த உண்மை பற்றிய சந்தேகங்கள் தன்னுள் வேலை செய்வதினால். தனக்கும் மற்றவர்களுக்கும் அதன் உண்மைத் தன்மையை உணர்ந்த ஒரு வழி தேடித் தவிக்கிற - ஒரு ஜீவனின் தற் சிறப்பு மோகமேயாகும். தற்சிறப்பை வலியுறுத்த வேண் டும் என்கிற அவனுடைய ஆசை சிறிது சிறிதாக, தன்னையே. தியாகம் செய்ய உதவும் மகத்தான சாதனையைச் செய்ய வேணும் என்ற தவிப்பாக மாறிவிட்டது. இந்தவித மனோபாவம் கிரிகரியை அவசியமில்லாமலே ஆபத்துக்களை நாடிச் செல்லும்படி தூண்டியது. உதாரணமாக, ஒரு நாள் அவன் பிறர் உதவிக்காகக் காத்திராமல் மிகவும் பருமனான நோயாளி ஒருவனை படுக்கையிலிருந்து குளிக்கும் இடத்திற்குத் தான் மட்டுமே சுமந்து சென்று, அளவுக்கு அதிகமான சிரமம் ஏற்றுக் கொண்டான். மிகவும் அசிங்கமான நோயாளிகளைக் கவனிக்கும் பொறுப்பை அவனே ஏற்றான்; தொத்து நோய் அபாயம் என்பதை அவன் இகழ்ச்சியாய் கருத்தினான். மனிதரிடம் வெறுப்பு என்று தோன்றக் கூடிய அளவுக்கு அவன் சகஜ சுபாவத்தோடு மரணத்தை மதித்தான். ஆனால் இவை எல்லாம் அவனுக்குப் போதுமானவையாக அமையவில்லை. மிகப் பெரிதான ஏதாவதொன்றைச் செய்து முடிக்க அவன் ஏங்கினான். இந்த ஏக்கம் வளர்ந்து வளர்ந்து அவனை வதை புரியலாயிற்று; மனம் குலையும் நிலைக்கு உந்தியது. அத்தகைய சந்தர்ப்பங்களில் அவன் தன் உள்ளத்தின் நிலைமையைத் தனது மனைவியிடம் கொட்டினான்.ஏனெனில், அவன் பேச்சைக் கேட்பதற்கு வேறு யாரும் இல்லை.