பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/134

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஆர்லோவ் தம்பதிகள் 123 ஒரு நாள் மாலை, அவர்களுடைய வேலே முடிந்து இராச் சாப்பாடு சாப்பிட்டானதும், தம்பதிகள் இருவரும் வயல் வெளிகளில் உலாவச் சென்ருர்கள். வாசஸ்தலம் நகரை விட்டுக் கொஞ்ச தாரம் தள்ளியிருந்த நீண்ட பசிய பள்ளத் தாக்கு ஒன்றில் அமைந்திருந்தது. அதன் ஒரு புறத்தில் மரங்களின் இருண்ட வரிசையும், மற்ருெரு பக்கம் நகர வாசிகளின் இருப்பிடங்களும் எல்லேயிட்டிருந்தன. வடக்கே வயல் வெளி வெகு தூரம் விரிந்து கிடந்தது. முடிவில் அதன் பச்சை நிறப் பரப்பு அடி வானத்தின் மங்கிய நீல நிறத்தோடு ஒன்று சேர்ந்தது. தெற்கே செங்குத்தான மலேயும் கதியும் காணப்பட்டன. அந்த மலேயின் ஒரமாக ரஸ்தா வளேங்து சென்றது. இலே செறிந்த முதிர்ந்த மரங்கள் பாதையில் இடை யிடையே கின்றன. சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருந்தது. பழத் தோட்டங்களின் கரும் பச்சை இலைத் தொகுப்புக்கும் மேலாக ஓங்கி நின்ற மாதா கோயில்களின் சிலுவைகள், சூரிய ஒளியின் பொன் கதிர்களே ஏற்றுப் பிரகாசமாய் எதிரொளி வீசி மின்னின. நகரின் வெளிப்புற வீடுகளில் உள்ள ஜன்னல்களும் அஸ்தமன சூரியனின் செவ்வொளி யைப் பிரதிபலித்தன. எங்கோ இசை பயிலும் ஒலி எழுங் தது. கணவாய் ஒன்றில் மண்டி வளர்ந்து கின்ற இளம் மரங்களில் வடிந்த பிசின் நாற்றம் எங்கும் பரவியது. மரங்களின் அழுத்தமான மணம் காற்றில் நிறைந்து கின்றது. மணம் கலந்த காற்றின் கதகதப்பான அலகள் மிருதுவாக நகர் நோக்கி நகர்ந்தன. விசாலமான வெறும் வயல்களில் இனிமை இருந்தது. அமைதியும் இனிய சோகமும் கலந்த சூழ் கிலே அது. கிரிகரியும் மேட்ரோனுவும் வயல்வெளிகளில் மெளன. மாக நடந்தார்கள். வாச ஸ்தலத்தின் காற்றங்களுக்குப்