பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 ஆர்லோவ் தம்பதிகள் பதிலாக இந்தச் சுத்தமான கா ற்றைப்பருகுவதில் அவர்கள் ஆனந்தம் அடைந்தார்கள். "இந்த இசை எங்கிருந்து வருகிறதோ தெரியவில்லை. நகரிலிருந்தா, அல்ல து முகாமிலிருந்தா?’ என்று மேட்ரோன, சிந்தனையில் ஆழ்ந்து விட்ட தன் கணவனிடம் கேட்டாள். . அவன் சிந்தனையில் லயித்து விடுவதை அவள் விரும்புவ தில்லை. அத்தகைய நேரங்களில் அவன் அங்கியனுகவும் அவளே விட்டு விலகிச் செல்பவளுகவும் தோன்றினன். இப்போதெல்லாம் அவர்கள் அபூர்வமாகத்தான் சந்தித் தார்கள். அப்படிக் கிடைத்த ஒவ்வொரு கணத்தையும் பொன்னகப் போற்றினுள் அவள். "இசையா?” என்று கேட்டான் கிரிகரி, ஏதோ கனவிலிருந்து விழித்து எழுந்தவன் போல. அந்த இசை எக்கேடும் கெடட்டும். எனது ஆத்மாவில் ஒலிக்கும் சங்கீதத்தை நீ கேட்க வேண்டும்! அதல்லவா உண்மை யான இசை!” என்ருன். "நீ என்ன சொல்கிருய்?' என்று மேட்ரோன, தன் கணவனின் முகத்தைக் கவலையோடு நோக்கியவாறே கேட்டாள். - "நான். நான் அறியேன். என் நெஞ்சு தீப்பற்றி எரிகிறது. அது மட்டும் தான் எனக்குத் தெரிகிறது. எனக்கு இடம் தான் தேவை. இடம் தான். எனது பலம் முழுவதையும் சேர்த்து வைத்துச் செயல் புரிவதற்கு உரிய இடம். என்னுள் கி ைற ங் து கிடக்கிற சக்தியை மிஞ்சிவிடக் கூடியது எதுவுமே இல்லை. உதாரணமாக, இந்தக் காலராவை ஒரு மனிதனுக மாற்றி விட்டால். ராட்சஸ் உருவினகை மாற்றினல்-கான் அவனுக்குச்