பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்லோவ் தம்பதிகள் 127 புரிந்து கொள்ள முடிய வில்லை. ஏனெனில் அவள் அதைப் புரிந்து கொள்ள முயற்சிக்கவே இல்லை. அவளுக்கு மிக அருமையானவன், அத்தியாவசியமானவன், அவளுடைய கணவன் தான்; கருத்தில் உருப்பெற்ற வீர நாயகன் எவனுமலல. அவர்கள் கணவாய் ஓரத்திற்கு வந்து அருகு அருகாக அமர்ந்தார்கள். இளம் பர்ச் மரங்களின் சுருண்ட முடிகள் தலை நிமிர்ந்து அவர்களைப் பார்ப்பது போல் கின்றன, கணவாயின் அடிப் புறத்தில் நீல நிற மப்பு கவிந்து கிடக் தது. அதன் ஆழத்திலிருந்து ஈரம், பைன் மர ஊசிகள், பழைய இலைகள் ஆகியவற்றின் ஒர் வகை காற்றம் மேலெழுந்து வந்தது. அடிக்கடி மென் காற்று தவழ்ந்தது. பர்ச் மரக் கிளைகள் அசைந்தன. சிறிய பர் மரங்களும் அசைந்து ஆடின. கணவாய் முழுவதும் பயந்து நடுங்கிய .ெ ம ல் லோ சை கிரம்பி யிருந்தது. அம் மரங்கள் தங்களுக்கு மிகவும் பிரியமான ஒருவர் தங்கள் நிழலின் பாதுகாப்பில் படுத்து உறங்குவதைக் கவனித்து, அவர் விழித்து விடக் கூடாதே என்று பயந்து மிக மெதுவாகப் பேசி நிற்பது போல் தோன்றியது. நகரத்தில் விளக்குகள் ஒளி வீசிக் கொண்டிருந்தன. பழத் தோட்டங்களின் இருண்ட பின்னணியில் பூத்த ஒளிப் பூக்கள் போல் விளங் கின. அவை. ஆர்லோவ் தம்பதிகள் போசாமலே உட்கார்க் திருந்தார்கள். அவன் தனது விரல்களினுல் முழங்கால் மீது தட்டிக் கொண்டிருந்தான். அவள் அவனைப் பார்ப் பதும் பெருமூச் செறிவதுமாக இருந்தாள். திடீரென்று அவள் தன் கைகளை அவன் கழுத்தைச் சுற்றி வளைத்துக் கொண்டு, தலையை அவன் மார்பில் பதித்தாள்,