பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்லோவ் தம்பதிகள் i45 "எனது ஆத்மாவையே சேதப்படுத்தி விட்டாய். எனக்கு நீ இழைத்துள்ள பாபம் மகத்தானது. என்ருலும் நான் அதை எல்லாம் தாங்கித் துயர் அனுபவித்தேன். ஏனெனில் நான் உன்னைக் காதலித்தேன். ஆனல் நீ இப்படி என் மூஞ்சியில் அறைந்த மாதிரிப் பேசுவதை நான் அனு மதிக்க மாட்டேன். நான் சகிக்கக் கூடிய அளவையும் மிஞ்சி விட்டது இது. நீ சொன்ன வார்த்தைகளுக்காகக் கொடிய கரகத்தில் விழுந்து காசமாவாய்!” "வாயை மூடு' என்று கிரிகள் கத்தி, கோபத்தோடு பற்களைக் காட்டினன். - "ஏய், இங்கே என்ன இவ்வளவு கூச்சல்: நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை மறந்து விட்டீர்களா?” கிரிகரியின் கண்களில் ஏதோ ஒரு திரை கவிந்து விட் டது. வாசல் கடையில் யார் சிற்பது என்பதை அவளுல் புரிந்து கொள்ள முடியவில்லை. பயங்கரமான வசையோடு அந்த ஆளே ஒதுக்கித் தள்ளி விட்டு அவன் வெளியே பாய்ந்து வயல் புறம் நோக்கி ஓடினன். மேட்ரோன ஒரு கணம் அறையின் மத்தியிலேயே கின்ருள். பிறகு குருடி மாதிரி தட்டுத்தடுமாறி, கைகளே நீட்டிக் கொண்டே படுக்கையை அடைந்து, ஒரு முனகலோடு, தன். நினைவை இழந்து விழுந்தாள். - இருட்டி விட்டது.ஆராய்ந்து பார்க்கும் பொன்னிறச் சந்திரன், சிதறிய மேகங்களையும் தாண்டி, தன் கூரிய நோக்கை அந்த அறையினுள் எறிந்தது. ஆனல் விரை விலேயே மாரிக் காலத்தின் முடிவற்ற சோக மயமான பெருமழைக்கு முன்னறிவிப்பான பெரும் தூற்றல் வாசஸ் தலத்தின் சுவர்கள் மீதும் ஜன்னல்களிலும் படபட வெனப் பொழிந்து கொண்டு இறங்கியது.