பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்லோவ் தம்பதிகள் #47 கிட்டக்கூடியது அல்ல என அறிவிக்கும் துர்கிமித்தங்களே எல்லாம் தன் உள்ளத்திலிருந்து துரத்திவிட்டு அக்கனவை அவள் வளர்த்துப் பாதுகாத்து வந்தாள். இருப்பினும் , இரிகரி மீண்டும் குடிக்கத் தொடங்கி விட்டான் என்ருல், தான் அவனேடு சேர்ந்து வாழ்வது சாத்தியமல்ல என்பதை அவள் வெகு கன்ருக அறிக்ருதிங்தாள். அவனே மாறுபாடு அடைந்த மனிதனாக அவள் கண்டிருக்கிருள். தானும் மாறிவிட்டதை அவள் உணர்ந்தாள். எனவே, அவளது பழைய வாழ்க்கையின் கினைப்பு கூட அவளுக்கு, அருவருப்பும் அச்சமும் அளித்தன. இத்தகைய உணர்ச்சி களே அவள் முன்பு எப்பொழுதுமே அனுபவித்ததில்லை. ஆயினும், அவள் ஒரு பெண். அதனலே தன்னுடைய கணவனுடன் ஏற்பட்ட சச்சரவுக்கு அவள் தன்னைத் தானே குற்றம் சாட்டிக் கொண்டாள். - "இது எப்படித்தான் நிகழ்ந்ததோ அட கடவுளே! எனக்கு வெறி பிடித்து விட்ட மாதிரி' ஒளி வளர்ந்து பரவியது. ஆகாயத்தை மூடிமறைத்துக் கொண்டு, கனத்த மூடுபனி வயல்கள் மீது கவிந்து தொங்கி ய்து. மேட்ரோன ஆர்லோவ்! வேலைக்குப் போக நேரம் ஆகி விட்டது' அந்த அழைப்புக்குப் பணிந்து அவள் எழுங்காள். அவ சரம் அவசரமாகத் தன்னே சுத்தப்படுத்திக் கொண்டு, வாசஸ்தலத்திற்குச் சென்ருள். அசதியும் சுகமின்மை போன்ற உணர்ச்சியும் அவளுக்கு ஏற்பட்டிருந்தன. அவளு டைய தளர்ச்சியும், ஒளி குன்றிய கண்களும், உற்சாகமற்ற முகமும் வார்டில் இருந்தவர்களுக்கு ஆச்சரியம் அளித்தன. "உனக்கு உடல் நலம் இல்லையா?” என்று டாக்டர் களில் ஒருவர் விசாரித்தார்.