பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/159

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

iáš ஆர்லோவ் தம்பதிகள் "ஒன்று மில்லை' என்னறுள் அவள். "எங்களிடம் சொல்வதற்குக் கூச்சப்படாதே உனக்கு பதிலாக வேறு யாரையாவது காங்கள் ஏற்பாடு செய்து கொள்கிருேம்.” மேட்ரோன வெட்கமடைந்தாள். தனது பயத்துடிப்பு களும் துயரங்களும், அன்பாக நடந்து கொண்ட போதி லும் தனக்கு அங்கியளான அந்த மாதுக்குத் தெரிய வேண் டாம் என்று தான் அவள் விரும்பினள். துயரால் நலிந்த தன் உள்ளத்தினுள் உறைந்திருந்த துணிவின் மிச்சத்தைத் திரட்டிக் கொண்டு சிறு சிரிப்போடு அவள் பதிலளித்தாள்: 'ஒன்றுமில்லை. நானும் என் கணவனும் சிறு சண்டை போட்டுக் கொண்டோம். அது சரியாகிவிடும். இது முதல் தடவை இல்லையே!” 'நீ அப்பிராணி, பாவம்' என்று அனுதாபப்பட் டாள் டாக்டர் அம்மாள். அவளுடைய வாழ்க்கைஎப்படிப் பட்டது என்பதை அந்த அம்மாள் அறிவாள். அந்த அம்மாளின் மார்பிலே தன் முகத்தைப் புதைத்துக் கொண்டு, தனது உணர்ச்சிக் கொதிப்புத் தணி யும் வரை அழ வேண்டும் என்ருெரு துடிப்பு மேட்ரோன வுக்கு உண்டாயிற்று. எனினும், அவள் வெறுமனே தன் உதடுகளே இறுக மூடிக்கொண்டு, பொங்கி வந்த அழுகை யை கெஞ்சுக்குள்ளே தள்ளுவதற்காகத் தொண்டையில் கையை வைத்து அழுத்தினள். - தனது வேலே முடிந்ததும் அவள் தன் அறைக்குப் போய், ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள். வயல் வெளிகளின் ஊடாக, வாசஸ்தலத்தை நோக்கி வண்டி வருவது தெரிந்தது. அநேகமாக மற்றுமொரு கோயாளியை