பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 ஆர்லோல் தம்பதிகள் அவன் சொல்ல வேண்டிய செய்தி இது அல்ல என் பது அவனுக்கே நன்கு புரிந்தது. அதனால் அவன் பேச்சை நிறுத்தி விட்டான். மேட்ரோனா அவனுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு நின்றாள்.அங்கிருந்து அவள் கொஞ்சம் கூட அசையவில்லை. அந்தப் பழைய கேள்வி தான் இப் பொழுதும் அவள் உள்ளத்தில் துடித்துக் கொண்டிருந் தது: "இனி என்ன நடக்கும்?" "மேட்ரோனா!" என்று குழைவுடன் கூப்பிட்டு. மேஜைக்கு மேலாக அவன் அவள் பக்கமாய் சாய்ந்தான். "பார்க்கப் போனால், எல்லாம் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இல்லை. அதற்கு நானா பொறுப்பு?" என்றான். அவன் தலையைத் தாழ்த்தி ஆழ்ந்த மூச்சை உள்ளுக்கு இழுத்தான். "வாழ்க்கை அழுகிப் போயிருக்கிறது. இதை வாழ்க்கை என்றா சொல்கிறாய்? ஆமாம். காலரா கோயாளிகள் இருக்கிறார்கள். அதனால் என்ன? அவர்கள் எனக்குச் சுலபமான வழி வகைகள் செய்து தருகிறார்களா என்ன? அவர்களில் சிலர் செத்துப் போகிறார்கள். மற்றவர்கள் சுபம் அடை கிறார்கள்.ஆனால். நான் வாழ வேண்டும். எப்படி? இது வாழ்க்கை அல்ல: இது ஒரு பெரிய இழுப்பு தான்.இது நியாயம் ஆகுமா? ஒவ்வொன்றும் எப்படி இருக்கிறது என்பதை நான் பார்க்கிறேன். ஆயினும் இதே ரீதியில் இனியும் நான் ஏன் வாழ முடியாது என்று விளக்கிச் சொல்லக் கஷ்டமாக இருக்கிறது. எனக்கு. அவர்கள் காட்டும் சிரத்தையையும் கவனிப்பையும் பாரு. ஆனால் கன் நன்றாக இருக்கிறேன். எனினும் என் உள்ளம் சீக்கடைந்து விட்டது. அதனால் நான் அவர்களை விட மதிப்புக் குறைந் தவன் என்றாகி விடுமா? நினைவில் வைத்துக் கொள்-