பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/177

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

166 ஆர்லோவ் தம்பதிகள் அவனைப் பாது காக்கவும் உதவி செய்தார். அது கை கூடிய தும், அமைதிகரமான-சேவை நிறைந்த-வாழ்க்கையை மேற்கொண்டாள். அவளுக்குத் தெரிந்த நர்ஸ் ஒருத்தி அவளுக்கு எழுதப்படிக்கக் கற்றுக் கொடுத்தாள். அவள் ஒரு விடுதியிலிருந்து இரண்டு அனுதைப் பிள்ளைகளை-ஒரு பையன், ஒரு பெண்-சுவீகாரம் செய்து கொண்டாள். தனது நிலைமையில் திருப்தி கொண்டு அவள் முழு ஈடு பாட்டுடன் உழைக்கிருள். ஆயினும் அவள் தன் பழைய வாழ்வை எண்ணிப் பார்க்க மறந்து விடுவதில்லை. அத் நினைவு அவளுக்கு பயமும் வருத்தமும் தரும். தனது மாணவர்களுக்குச் செய்து காட்ட வேண்டிய எதையும் அவள் அதிகப்படியானது, சிரமமானது என்று கருதுவ தில்லை. தன் வேலையின் முக்கியத்துவம் பற்றி அவள் பரங்த கோக்கு பெற்றிருக்கிருக்கிருள். மிகவும் மனநேர்மை உடையவள். அதல்ை பள்ளிக்கூட கிர்வாகிகளின் நன் மதிப்பை அடைந்திருக்கிருள் அவள். ஆனல் மோசமான வறண்ட இருமல் அவளுக்கு இருக்கிறது. கேடு செய்யும் ரத்தக்கட்டு அவள் கன்னக் குழிகளில் எரிச்சல் கொடுத்து வருகிறது. சாம்பல் கிறக் கண்களில் சோகம் படர்ந்து கிடக்கிறது. - கிரிகரியின் அறிமுகமும் எனக்குக் கிட்டியது. நகரத் தின் அநாகரிகச் சேரிகளிலே கான் அவனேக் கண்டேன். இரண்டு மூன்று சந்திப்புகளுக்குப் பிறகு அவனுக்கு நண்பன் ஆனேன். அவன் மனைவி சொன்ன கதையையே அவனும் என்னிடம் சொன்னன். பிறகு, சிறிது சிந்தித்து விட்டு இதையும் கூறினன்: "ஆகவே அது எப்படி முடிந்தது, மாக்ஸிம் கான் ஒரளவு உயர்த்தப் பட்டேன். அப்புறம் மறுபடியும் தாழ்ந்து விட்டேன். நான் செய்யவேண்டும் என்று கனவு கண்ட பெரிய காரியத்தைச் செய்யவே இல்லை. ஆலுைம்,