பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/179

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

i88 ஆர்லோவ் தம்பதிகள் நாலாபுறமும் இழுக்கப்படுவது போன்ற உணர்ச்சியினால் எப்பொழுதும் அவதிப்படுகிற என் மாதிரி ஆசாமி ஒருவனைக் கட்டிக்கொண்டு அவள் தான் என்ன பண்ண முடியும் என் உள்ளத்தில் குடியிருக்கிற இந்த சஞ்சல சுபாவத்தோடு கான் பிறந்து விட்டேன். நாடோடியாக இருப்பது தான் என் விதி. நான் அலைந்து திரிந்திருக் கிறேன். சகலவிதமான இடங்களுக்கும் போயிருக்கிறேன். சுகம் என்பது எங்குமே இல்லை...குடியா சங்தேக மில்லாமல், நான் குடிக்கிறேன். தீயை அணப்பதற்கு வோட்கா மது ஏற்றதுதான். என்னுள் பென்னம் பெரிய தி அல்லவா சிறி எரிந்து கொண்டிருக்கிறது. நகரங்கள், கிராமங்கள், பல தரப்பட்ட மக்கள்-எல்லோர் மீதும், எல்லாவற்றின் பேரிலும் எனக்கு வெறுப்பு தான். நரகமாம்-இதை விட மேம்பட்டதான நரகம் ஒன்றைப் பற்றி எண்ணமுடியுமா என்ன? ஒவ்வொருவனும் தனக்கு அண்டை அயலில் இருப்பவனுக்கு எதிராகக் குமுறுகிருன். அவர்கள் எல்லோருடைய உடல்களிலிருந்தும் உயிரைக் கசக்கிப் பிழிந்து விடுவதைத் தான் நான் பெரிதும் விரும்பு வேன். வாழ்வாம் வாழ்வு சைத்தானின் கண்டு பிடிப்பு தான் அது." கிரிகரியும் நானும் உட்கார்ந்திருந்த மதுச் சாவடியின் கனத்த கதவு சதா, திறந்து மூடிக்கொண்டு இருந்தது. ஒவ் வொரு அசைவின் போதும் அது கீச்சிட்டுக் கத்தியது. அந்த மதுச்சாவடியின் உட்புறமோ, ரஷ்யாவின் ஏழை எளியவர்களே எல்லாம்-அமைதியற்றவர்களையும்,அப்படி இல்லாதவர்களையும்-ஒருவர் பின் ஒருவராய், மெதுவாக ஆனால் நிச்சயத் தன்மையோடு, விழுங்கிக் கொண்டிருக்கும் ஒரு பெரிய வாய் போல் காணப்பட்டது. (1897.) مة تيتيتيتيتيتيتيتيتيتيتي تتصد