பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சின்னஞ் சிறு பெண்

9



“அதற்குப் பிறகு என்ன நேர்ந்தது?” என்று நான் விசாரித்தேன்.

“அதற்குப் பிறகா? ஏன், ஒன்றுமில்லை, அந்நியனே” என்று கிழவன் பெரு மூச்சுடன் சொன்னான்.

“அவள் செத்துப்போனாள். கொடிய காய்ச்சலினால் செத்து விட்டாள்”.கிழவியின் சுருக்கம் விழுந்த கன்னங்களில் இரு துளிக் கண்ணீர் வடிந்தது.

“அவள் செத்துப்போனாள், அந்நியனே. எங்களோடு அவள் இரண்டு வருஷங்கள் தான் வாழ்ந்தாள். அங்த ஊரில் உள்ள எல்லோரும் அவளை அறிவார்கள். ஊர் என்றா சொன்னேன்? ஏன், அதை விட அதிகமானவர்களுக்கு அவளைப்பற்றித் தெரியுமே.அவள் படித்திருந்தாள். ஊர்ப் பெரியவர்களோடு உட்கார்ந்து அவளும் ஆலோசனைகளில் கலந்து கொள்ளுவாள். சில சமயங்களில் அவள் வெடுக்கென்று பேசி விடுவாள். ஆனாலும் யாரும் அதைப் பெரிதுபடுத்துவதில்லை. அவள் கெட்டிக்காரி.”

“ஆ! ஆனால் அவள் இதயம் தான் முக்கியமானது. ஒரு தேவதையின் இதயம் அவளுக்கு இருந்தது. எங்கள் எல்லோருடைய துயரங்களுக்கும் அவள் உள்ளத்தில் இடம் இருந்தது. அவை அனைத்தையும் அவள் தன்னுடையவையாக ஏற்றுக்கொண்டாள். பட்டணத்திலிருந்து வருகிற எந்தச் சீமாட்டி போலவும் தான் அவளும் காணப்பட்டாள் வெல்வெட் சட்டை, ரிப்பன்கள், நல்ல பாதரட்சைகள் ஆகியவற்றோடு தான். அவள் புத்தகங்கள் படித்தாள்: எல்லாம் செய்தாள். என்றாலும், குடியானவர்களாகிய எங்களைப் பற்றி எப்படி புரிந்து கொண்டிருந்தாள் தெரியுமா! எங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியவை பூராவும் அவளுக்குத் தெரியும். அதை எல்லாம் நீ