பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

சின்னஞ் சிறு பெண்



"அவளுக்காக!' என்று நான் திரும்பவும் கூறினேன்.

"அவளுக்காகத்தான். அந்நியனே' என்று கிழவன் சொன்னுன்.

அந்தப் பெண்ணின் ஆத்மா உய்வதற்காகவே அவ் விருவரும் ஆயிரக் கணக்கான மைல்கள் நடந்து வந்திருக் கிருர்கள் என்று அவர்கள் திரும்பத் திரும்பச் சொல் வதைக் கேட்க விரும்பினேன் நான். கம்ப முடியாத அளவு அதிசயமான விஷயம் என்று தான் அது எனக்குப் பட்டது. "அவளுக்காகத் தான்", கரு நிறக் கண்கள் பெற்றிருந்த சிறு பெண்ணுக்காகத்தான், அவர்கள் இந்த அற்புதமான காரியத்தைச் செய்தார்கள் என்று என்னை நானே உறுதிப்படுத்திக் கொள்ளத் தவித்தேன். அதனுல், நியாயமாகத் தோன்றக் கூடிய வேறு பல காரணம் எதுவும் இல்ல் என்று அவர்கள் திட்டமாக எனக்கு அறிவுறுத்தினுர்கள். அது எனக்குப் பெரும் மகிழ்ச்சியே தங்தது.

"இவ்வளவு தூரமும் நீங்கள் நடந்து நடந்துதானு வந்தீர்கள்?"

"ஐயோ, அப்படி இல்லை! சில சமயங்களில் நாங்கள் வண்டிகளில் வந்தோம். ஒரு நாள் சவாரி. பிறகு ஒரு நாள் நடை. கொஞ்சம் கொஞ்சமாக, சிரமப்பட்டு நடந்து வந்தோம். வழி பூராவும் நடந்து போக முடியாதபடி நாங்கள் கிழடுகள் ஆகி விட்டோம் எங்களுக்கு எவ்வளவு வயதாகி விட்டது என்பது கடவுளுக்கே தெரியும். அவளைப் போல் எங்களுக்கும் இளமை இருந்தால், நிலமை வேறு விதமாக இருக்கும்.”

அவளைப் பற்றி-வீட்டையும் தாயையும் பிரிந்து, தொலை தூரத்தில் உள்ள ஒரு மூலையில் போய், கொடிய காய்ச்சலினுல் சாகவேண்டும் என்று விதி பெற்று விட்ட