பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/29

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

18 இரண்டு குழந்தைகள் இருவரும் ஒன்றும் பேசாமல் தெருவை மேலும் கீழுமாகப் பார்த்தவாறே ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டு நின்றனர். . "அந்தக் கிழட்டுப் பிசாசு நம்மைப் பார்க்கவே இல்லை” என்று ஏழைச் சிறுவன் விஷமத்தனமாக வெற்றிக் குரலில் ரகசியம் பேசினான் "அந்த மூலையைத் திரும்பி அவர் அந்தப் பக்கமாகப் போய் விட்டார்” என்று அறிவித்து சிறுமி கேட்டாள்: "அந்தப் பணக்கார ஆசாமி எவ்வளவு தந்தார்?" "பத்து கோப்பெக்குகள்" என்று மிஷ்கா அலட்சிய மாகப் பதில் சொன்னான். "அப்படியென்றால் எவ்வளவு?” "ஏழு பத்துகளும் ஏழு கோப்பெக்குகளும்.” "அவ்வளவு ஆச்சுதா? அப்ப நாம் சீக்கிரமாக வீடு திரும்பி விடலாம். இல்லையா? ரொம்பவும் குளிர்கிறதே." அவளே பயப்படுத்தும் முறையில் மிஷ்கா பேசினான்: "அதற்கு இன்னும் எவ்வளவோ நேரம் கிடக்கிறது.நீ கவனமாக இரு. எல்லோருக்கும் தெரியும்படியாக வேலை செய்யாதே. போலீஸ்காரன் பார்த்தால் உன்னைப் பிடித்து கொண்டு போவான்; சரியானபடி உதையும் கொடுப்பான். இதோ ஒரு படகு வருகிறது. நாம் போகலாம் வா.” ரோம உடை போர்த்த பருமனான மாது ஒருத்தி தான் அந்தப் படகு. இதிலிருந்து மிஷ்கா ரொம்பவும் கெட்ட பையன், முரடன், முதியோரிடம் மரியாதை இல்லாதவன் என்பது புரியும். "அன்பான பிராட்டியே...' என்று அவன் புலம்பினான்.