பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டு குழந்தைகள் 29 அவன் சங்கோசம் இல்லாமல் சகஜமாகப் பழகும் தன்மையைக் கண்டு அவள் திகைப்புற்றிருந்தாள். பலரும் வந்துபோகிற பொது விடுதியில், காது செவிடு படும்படி நிலவிய சந்தடிக்கு மத்தியில், அவளால் அமைதியாய் சகஜ பாவத்தோடு இருக்கவே முடியாது. தங்கள் காதைத் திருகி எந்த நேரத்திலும் வெளியே தள்ளிவிடக் கூடும் என்ற பயம் அவளுக்கு இருந்தது. இன்னும் பெரிய பயங்க ளும் அவள் மனதைக் கலக்கின. ஆயினும் தன் எண்ணங் களே மிஷ்கா ஊகித்து உணர்வதைக் கூட அவள் விரும்ப வில்லை. ஆகையினால் அவள் தனது கூந்தலை இழுத் து விட்டுச் சரிப்படுத்திக் கொண்டு, தன்னைச் சுற்றிலும் சாதாரணமாகவும் அலட்சிய பாவத்தோடும் பார்க்க முயற்சி செய்தாள். அவ்விதம் அவள் செய்த முயற்சியினால், அழுக்குப் படிந்திருந்த அவளது கன்னங்கள் மிகுதியான ரத்தமேற்றுச் சிவந்தன. அவள் தன்னுடைய குழப்பத்தை மறைத்துக் கொள்வதற்காகத் தனது நீல விழிகளைச் சுழற்றிக் கொண்டிருந்தாள். அதே சமயம் மிஷக சிரத்தையோடு அவளுக்குப் போதித்துக் கொண் டிருந்தான். அதற்காக அவன் தனக்குத் தெரிந்த சிக்னி என்ற கூலிக்காரன் ஒருவனின் குரலையும் வார்த்தைப் பிரயோகங்களையும் அனுஷ்டித்தான். அந்தக் கூலியாள் குடிகாரனாக இருந்தாலும், திருடி விட்டு மூன்று மாத காலம் சிறையில் அடைபட்டுக்கிடதது வெளியே வந்திருந்த போதிலும், மிகவும் உணர்ச்சி ஊட்டக் கூடிய ஆசாமி என்பதை மிஷ்கா கண்டு பிடித்திருந்தான். ஆகவே சும்மா உதாரணத்திற்காக எடுத்துக் கொள்வோம். நீ பிச்சை எடுக்கிறாய். எப்படி நீ பிச்சை எடுக்கிறாய்? 'அன்பு காட்டுங்கள். இரக்கம் காட்டுங்கள் 'என்று சொல்லிக் கொண்டிருப்பதில் ஒரு எழவு பிரயோசனமும் கிடையாது. அது சரியான வழி அல்ல. நீ செய்ய