பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆர்லோவ் தம்பதிகள் 39 சூரியன் அஸ்தமித்து விட்டது. எனினும் முற்றத்தில் புழுக்கம் குறையாமலிருந்தது. அங்குள்ள காற்றில் வர்ணங் கள், கீலெண்ணெய், கெட்டுப்போன முட்டகோசு, மற்றும் பல அழுகல்கள் ஆகியவற்றின் வாடை கிலவி கின்றது. வீட்டின் இரண்டு தளங்களிலும் உள்ள எல்லா ஜன்னல் களிலிருந்தும் பாட்டுச் சத்தமும் சண்டையின் கூச்சலும் வந்து கொண்டிருந்தன. அவ்வப்போது ஏதாவது ஒரு சாளரத்தினூடே, மந்த சுபாவம் பெற்ற முகம் ஒன்று ஆர்லோவை உறுத்து கோக்கும் ஒரு கணம் பின், சிறுசிரிப் புடன் மறைந்து விடும். வர்ணம் பூசும் தொழிலாளிகள் வேலை முடிந்து விடு திரும்புகிற பொழுது, ஆர்லோவின் பக்கமாகச் செல்கையில் அவன் மீது ஒரக்கண் பார்வை வீசி விட்டு, தங்களுக்குள் கண்ணேச் சிமிட்டிக் கொள்வார்கள். அவர்களுடைய பேர் சொலி முற்றம் முழுவதும் உயிர்த் துடிப்புடன் கிறைந்து விடும். அவர்களில் சிலர் குளிக்கக் கிளம்புவார்கள். மற்ற வர்கள் குடிக்க மதுக்கடை கோக்கிச் செல்வார்கள்.தையல் காரர்கள்- மெலிந்த உடலும், வளேந்த கால்களும், அரை குறையான உடைகளும் பெற்ற கூட்டம்-இரண்டாவது தளத்தில் உள்ள தங்கள் அறைகளிலிருந்து ஊர்ந்து வந்து கீழ் முற்றத்தை அடைவார்கள் காய்க் தபட்டாணிக்கடலே களேத் துப்பவதுபோல, வர்ணத்தொழிலாளிகள் வார்த்ைதி களே உச்சரிப்பதற்காகக் கேலிசெய்யத் தொடங்குவார்கள். அங்கே கூச்சலும் கிண்டலும், கேலிச் சிரிப்பொலியும் கூடிக் கலகலப்பு கிறைந்து விடும். ஆல்ை ஆர்லோவ் யார் பக்கமும் திரும்பிப் பார்க்கா மல் மெளனியாகவே உட்கார்ந்திருப்பான். அவனே அணுக எவரும் முன்வரமாட்டார்கள். அவனேச் சாட்டிக்கேலிகள் பேசிக்களிக்கவும் ஒருவரும் துணி. அத்தகைய சந்தர்ப்