பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44 ஆர்லோவ் தம்பதிகள் அவர் அவளுக்குப் பக்கத்தில் உட்காரும் பொழுது கொட்டாவி விட்டுக்கொண்டே, "என்ன, மறுபடியும் சண்டையா?" என்று கேட்பார். "அதைப் பற்றி உனக்கென்ன? என்று எரிந்து விழு வாள் மேட்ரோனு. "ஒரு மண்ணுமில்லே தான்" என்பார் அந்த உக்ரேனிய வாசி. அப்புறம் நீண்ட அமைதி. அவள் மூச்சு விடும்பொழுது அவளுடைய மார்பினுள் வெகு ஆழத்தில் கிடக்கிற ஏதோ ஒன்று கரகரத்த ஓசை எழுப்பும். "நீங்கள் இரண்டு பேரும் எதைப் பற்றி ஓயாது சண்டை போடுகிறீர்கள்? உங்கள் இருவருக்கு மிடையே உள்ள தகராறு தான் என்ன?" என்று லெவ்செங்கோ அமைதியான சிந்தனைக்குப் பிறகு, ஆரம்பிப்பார். "அது எங்கள் சொந்த விஷயம்." "அதில் என்ன சந்தேகம்" என்று தலையை ஆட்டிக் கொண்டே ஆமோதிப்பார் லெவ்செங்கோ. 'பின்னே நீ ஏன் அநாவசியமாகத் தலையிடுகிறே?” "என்ன பெண்பிள்ளையடா இவள்! இவளிடம் ஒரு வார்த்தை கூடப் பேசக் கூடாதாம்! நீயும் கிரிகரியும் சரியான ஜோடிதான்-நான் உறுதியாகச் சொல்லுவேன். உனக்குத் தேவையானது என்ன தெரியுமா? தினசரி இரண்டு வேளையும் சரியான பூசைக் காப்பு தான்- காலை யிலே ஒரு தடவை; சாயங்காலம் ஒரு தடவை. அதுதான் உன்கிட்டே இருக்கிற முறைப்பு பூராவையும் போக் கடிக்கும்' -