பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/59

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

48 ஆர்லோவ் தம்பதிகள் பாச்சைகள் பெருந்தோரணையோடு சு வர் க ளி ல் மேலும் கீழுமாக ஊர்ந்து கொண்டிருந்தன. சஞ்சிகை களிலிருந்து கத்திரித்து எடுக்கப்பட்ட படங்களேசுவர்களில் ஒட்டி வைப்பதற்காக உபயோகித்திருந்த க று ப் பு ரொட்டிமாவின் பொருக்குகளை அவை தின்று களித்தன. சோம்பேறி ஈக்கள் அலுப்புத் தரும்படியான ஒரே ாக இரைச்சலைப் பரப்பியவாறு எங்கும் மிதந்தன. ஈக்கள் மண்டிய படங்கள் அழுக்குப் படிந்த சுவர்களின் பகைப் புலனில் கரிய கரிய திட்டுகளாக அமைந்து கிடந்தன. ஆர்லோவ் தம்பதிகளின் தினசரி நியதி இதுதான்: காலே ஆறு மணிக்கு மேட்ரோன விழித் தெழுவாள். உடலேக் கழுவி விட்டு, ஸ்மோவாரில் தீ மூட்டுவாள். சண்டையில் அடிபட்டு, அங்கு மிங்கும் தகரப் பற்றுகள் பிடிக்கப்பட்டு விளங்கிய உருப்படி அது. ஸ்மோவாரில் தண்ண்ரீர் கொதிப்பதற்காகக் காத்திருக்கிற வேளையில் அவள் அறையைச் சுத்தப்படுத்துவாள் கடைக்குப் போய் வருவாள். பிறகு தன் கணவனே எழுப்புவாள். அவன் எழுத்து, தன்னைச் சுத்தம் செய்து கொள்வதற்குள், ஸ்மோவார் மேஜை மீது இரைந்து கொண்டிருக்கும். காலே உன்டியை ருசிப்பதற்காக அவர்கள் அமருவார்கள். தே ருேம் வெள்ளே ரொட்டியும் - இரண்டு பேருக்கும் சேர்த்து ஒரு ராத்தல்-தான் அவர்கள் காலே ஆகாரம். கிரிகரி செருப்பு தைப்பதில் ன் கு தேர்ந்தவன். அதல்ை எப்பொழுதும் அவனுக்கு கிறைய வேலே இருந்தது. காலையில் சாப்பிடும் சமயத்திலேயே, அன்று பகற் பொழுதில் செய்தாக வேண்டிய அலுவல்களைக் கணக் கிடுவான். தேர்ச்சி பெற்றவனின் திறமை தேவை என்று தோன்றக் கூடிய வேலைகளே எல்லாம் அவனே கவனிப் பான். இரண்டாம் பட்சமான அலுவல்களை நூலுக்கு