பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆர்லோவ் தம்பதிகள் 49 மெழுகிடுதல், செருப்புகளின் உட்புறப் பகுதிகளைப் பொருத்துதல், புதிய குதி கால் பகுதிகளுக்கு ஆணி அடித்தல் போன்றவற்றை- மேட்ரோனாவிடம் ஒப்படைத்து விடுவான். மத்தியானச் சாப்பாட்டுக்கு என்ன என்ன செய்யலாம் என்பது பற்றியும் அவர்கள் காலை ஆகாரத்தின் போதே விவாதித்து முடிவு கட்டி விடுவார்கள். குளிர் காலத்தில் - அவர்கள் நிறையச் சாப்பிடும் பருவம் அது - இந்த விஷயம் சுவையான விவாதத்துக்கு வகை செய்யும். கோடை காலத்தில் அவர்கள் சிக்கனத் திட்டத்தை அனுஷ்டிப்பார்கள். ஞாயிற்றுக் கிழமை தோறும் தான் அடுப்பு பற்ற வைப்பார்கள். ஒரு சில ஞாயிறுகளில் அடுப்பு புகையாமல் இருந்து விடுவதும் உண்டு. ஆகவே, அவர்களுடைய முக்கிய உணவு குளிர்ந்த சூப்பு தான். வெங்காயத்தையும் கருவாட்டுத் துண்டுகளையும் அதில் கலந்து கொள்வார்கள். சில சமயங்களில், பக்கத்து வீட்டாரின் அடுப்புகளில் சமைத்து எடுத்த மாமிசத்தையும் சேர்த்துக் கொள்வது உண்டு. காலைச் சாப்பாடு முடிந்ததும், அவர்கள் இருவரும் வேலை செய்ய உட்காருவார்கள். ஒரு பக்கம் கீறல் விழுந்த ஊறுகாய் தொட்டி ஒன்றைக் குப்புறப் போட்டு அதன் மீது கிரிகரி உட்கார்ந்து கொள்வான். அவனுக்கு அருகில் தணிந்த ஸ்டூல் ஒன்றில் அவன் மனைவி இருப்பாள். முதலில் அவர்கள் மெளனமாக வேலை செய்வார்கள். பேசுவதற்குத்தான் விஷயம் ஏது? வேலை சம்பந்தமாக ஒரு சில வார்த்தைகள் பரிமாறிக் கொள்ளலாம். ஆனால், மறு படியும் பேசாமல் வேலை செய்வார்கள். இந்த மௌனம் அரை மணி நேரமோ, அல்லது அதற்கும் அதிகமாகவோ நீடித்திருக்கும். டப் -டப் என்று சுத்தி ஒலி செய்யும். தோலினூடாகப் புகுந்து இழுபடும் நூல் 'விஷ் - விஷ்'