பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70 ஆர்லோவ் தம்பதிகள் வதற்கில்லை. நான் ஒரு மாதிரியாகத் தோன்றுவதற்குக் காரணம்-உங்களிடம் உள்ளதைச் சொல்லி விடுகிறேனே, நான் கொஞ்சம் குடித்திருந்தேன்.” "வாஸ்தவம் தான். நீ நேற்று ராத்திரி கொஞ்சம், உண்மையில், மிகவும் கொஞ்சமான ஒரு துளி, குடித்திருந்தாய் என்பதை என் மூக்கே எனக்குச் சொல்லி விட்டது.” இதை அவன் வேடிக்கையாகச் சொன்ன தினுசும், அவலட்சணமாக முகத்தைச் சுளித்ததும் சேர்ந்து கிரிகரியை வாய்விட்டுச் சிரிக்க வைத்தன. மேட்ரோனாவும் கூட, தனது வாயை மேல் துணியினால் மூடி மறைத்துக் கொண்டே, சிரித்தாள். அவர்கள் எல்லோரையும் விட உரத்தும் பலமாகவும் சிரித்தவன் மாணவன் தான். முதலாவதாகச் சிரிப்பை நிறுத்தியவனும் அவனே.அவனது தடித்த உதடுகளையும் கண்களையும் சுற்றிப் படிந்திருந்த சிரிப்பின் சுருக்கங்கள் ஒடுங்கி மறைந்ததும் அவனுடைய கபடமற்ற முகம் மேலும் அதிகமாக தெளிவுடன் பிரகாசித்தது. "உழைக்கிறவன் குடிக்க வேண்டியதுதான். அது நியாயம்தான். ஆனால் எப்பொழுது நிறுத்த வேண்டியது என்பதையும் அவன் தெரிந்து கொள்ள வேணும். ஆனால் காலம் இருக்கிற நிலைமையில் இப்போதெல்லாம் குடிக்காமல் இருப்பது எவ்வளவோ நல்லது. இந்த ஊரில் பரவி வருகிற நோய் பற்றி நீங்கள் கேள்விப்பட்டீர்களா?” காலரா பற்றியும் அதைத் தடுக்கும் முறைகளைப் பற்றியும் அவன் மிகுந்த கருத்தோடு எளிய வார்த்தைகளில் எடுத்துச் சொன்னான். அப்படிப் பேசும் பொழுதே அவன் அறையைச் சுற்றிலும் நடந்து, சுவர்களைப் பரிசீலனை செய்தான்; தொட்டியும் வடிநீர் வாளியும் இருந்த மூலையைக் கவனித்துப் பார்த்தான். அடுப்புப் பொந்