பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்லோவ் தம்பதிகள் - 84 அவன் கரு கிற துரை விளிம்பு கட்டியிருந்த உதடுகளைத் திறந்து, ஓசை எழாத குரலில் பேசினன்: "நான்...செத்துக்.. கொண்டிருக்கிறேன்." சொல்ல முடியாத உணர்ச்சியின்மையோடு பேசப் பட்ட இவ்வார்த்தைகள் கிரிகரியை, நெஞ்சிலும் தலைமீதும் தனித்தனியே விழுந்த ஊமை அடிகள் போல், தாக்கின. அவன் அசட்டுத்தனமாகப் பல்லிளித்து விட்டு வாசலை நோக்கித் திரும்பினன். ஆனல் அதே கணத்தில், சென்கா மேல்மூச்சு வாங்க, மேலெல்லாம் வேர்வை வடிய, ஒரு வாளித் தண்ணிரைச் சுமந்து கொண்டு உள்ளே ஓடி வந்தான். "இதோ-ஸ்பிரிடோனேவ் கிணற்றிலிருந்து-அங்கே இருப்பவர்கள், காய் மகன்கள். எனக்குத் தண்ணிர் தரச் சம்மதிக்கவே இல்லை." அவன் வாளியைத் தரைமீது வைத்து விட்டு, ஒரு மூலைக்குள்ளே புகுந்தான் திரும்பி வந்து கிரிகரியிடம் ஒரு கிளாசைக் கொடுத்தான். அவ்வளவு நேரமும் அவன் பேசிக்கொண்டுதான் இருந்தான். ஆகவே உங்கள் வீட்டுக்குக் காலர்ா வங்து விட்ட தாக்கும்?' என்று அவன் என்னிடம் கேட்டான். எங்க ளுக்கு வந்திருந்தால் என்ன?’ என்றேன். எங்களிடம் அது வந்துவிட்டது. உங்களுக்கும் வந்து சேரும் போன தடவை குடியிருப்பில் வந்து போயிற்றே, அது மாதிரி அது நிச்சயமாக எல்லா இடத்தையும் சுற்றிவிட்டுத்தான் போகும்' என்று சொன்னேன். படார்! அவன் என். ம்.ண்டையிலே ஓங்கி ஒரு அறை கொடுத்தான்.'