பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 / வயலூர் சண்முகம் இடுப்பில் உடுத்தும் துணிகூட இன்றித் தவிப்போர் துயர்போக்கல் கொடுப்பவர் கரங்களை உயர்த்திவிடும்! கொடைகளில் இதுவே நற்கடமை! கற்க வசதிகள் அற்றோரோ காசினி தன்னில் மிகபேர்கள்! நிற்கும் அறத்தில் கல்வியறம் நிதிகள் மிகுந்தோர் உதவுதல் தான்! ஏழை எளியோர் வசிப்பதற்கே இல்லம் அமைத்துத் தருவதுவும் வாழும் வள்ளல்கள் பெருங்கடமை! “வழங்கும் கைகளின் அருங்கடமை! ஐந்து கரங்களால் விநாயகர்தான் அருளும் இந்த சூட்சுமங்கள் விந்தை யான கருத்தன்றோ? விளங்கிக் கொள்ளுதல் நன்றன்றோ! ஆதி மூல அண்ணலெனும் ஆனை முகத்துப் பெருமானை ஒதிப் பாடித் துதித்திட்டே ஒவ்வொரு தினமும் மகிழ்ந்திடுவோம்!